ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்காக சுப்மன் கில்லை பயன்படுத்துவதை விட கேஎல்.ராகுலை பயன்படுத்துவதே சரியானதாக இருக்கும் என அனில் கும்ப்ளே கருத்து தெரிவித்திருக்கிறார்.
இந்திய அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஏதாவது ஒரு போட்டியில் ரோகித் சர்மா விளையாட முடியாமல் போகும் என்று கூறப்படுகிறது. இதை ஒட்டி அனில் கும்ப்ளே தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.
இவர்தான் கில்லை விட சரியானவர்
இது குறித்து பேசி இருக்கும் அனில் கும்ப்ளே கூறும்பொழுது ” ஆஸ்திரேலியா தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கு ஒரு வேலை ரோகித் சர்மா விளையாட முடியாவிட்டால், மீண்டும் துவக்க வீரராக கில்லை விளையாட வைக்கும் ஒரு எண்ணம் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு இருக்கும். ஆனால் அந்த வேலைக்கு கில்லை விட கேஎல்.ராகுல் மிக பொருத்தமானவராக இருப்பார்”
“அணி நிர்வாகம் எப்படி மாற்றி அமைக்க வேண்டும் என சொல்கிறதோ அதற்கு ஏற்றபடி செயல்படக்கூடிய வீரராக கேஎல்.ராகுல் இருக்கிறார். துவக்க வீரராகவோ அல்லது பேட்டிங் வரிசையில் வேறு இடத்திலோ அல்லது விக்கெட் கீப்பராகவோ எதை அணி நிர்வாகம் விரும்பினாலும் அதை அவரால் செய்ய முடியும். முன்பு இதை இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் செய்து வந்தார்”
கில் இப்படியான வேலையை செய்ய வேண்டும்
மேலும் பேசிய அனில் கும்ப்ளே “நீங்கள் முதல் செசனை சிறப்பாக விளையாடி அதை கடந்த பிறகு உங்களுக்கு ஆஸ்திரேலியாவில் கூக்கபுரா பந்தில் விளையாடுவது எளிதாக மாறும். முதல் ஒன்றரை மணி நேரங்கள் கடந்து, 30 முதல் 60 ஓவர்கள் வரை பேட்டிங் செய்வதற்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.எனவே டாப் ஆர்டரில் இருப்பவர்கள் அடுத்து வரக்கூடியவர்களுக்கு இந்த ஓவர்களை தள்ளிக் கொடுக்க வேண்டும்”
W1இதையும் படிங்க : தம்பி நீங்க இந்தியால ஓகே.. ஆனா அங்க ஆடுறப்போ அத்தனை பேர் கண்ணும் உங்க மேலதான் இருக்கும் – பார்த்தீவ் பட்டேல் பேட்டி
“பேட்டிங் வரிசையில் மூன்றாவதாக வரக்கூடிய கில் ஆஸ்திரேலியா சூழ்நிலையில் புதிய பந்தில் முதல் செசனை சரியாக ஆடி நகர்த்தி அடுத்து வரக்கூடிய பேட்ஸ்மேன்களுக்கு கொடுக்க வேண்டும். கண்டிஷன் அடிப்படையில் அவர் சிறிது தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த ரோலை செய்வதற்கான திறன் அவரிடம் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.