விராட் கோலிக்கு வித்தியாசமாக செக் வைக்கும் பிசிசிஐ.. உச்சகட்ட கோபத்தில் ரசிகர்கள்!

0
513
Virat

தற்போதைய உலகக் கிரிக்கெட்டில் தனித்துவமான ஒரே ஒரு பேட்ஸ்மேன் விராட் கோலி மட்டும்தான். ஏனென்றால் அவர்தான் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் தாக்கம் தரக்கூடிய ஆட்டத்தை விளையாடக்கூடிய பேட்ஸ்மேன் ஆக இருக்கிறார். மற்ற யாரும் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு வடிவங்களில்தான் சிறப்பாக இருக்கிறார்கள்.

கடந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் சார்பில் அதிக ரன் அடித்த வீரராக விராட் கோலி வந்தார். மேலும் பாகிஸ்தானுக்கு எதிரான மிக முக்கியமான போட்டியில் கிரிக்கெட் உலகம் என்றும் மறக்காத ஒரு அசாதாரண பேட்டிங்கை வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்தினார்.

- Advertisement -

தற்பொழுது இந்தியாவில் நடந்து முடிந்திருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையிலும் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக மூன்று சதங்கள் உடன் அவரே இருக்கிறார். அரை இறுதியில் சதம் மற்றும் இறுதி போட்டியில் அரை சதம் அடித்தார். உலகக் கோப்பையை வெல்லாவிட்டாலும் கூட விராட் கோலியின் பேட்டிங் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக, டி20 இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் தேர்வு செய்யப்படாமல் இருந்து வந்தார்கள். உலகக் கோப்பைக்கு முன்பாக டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் விளையாட ஆர்வம் இருப்பதாக ரோகித் சர்மா வெளிப்படையாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் பிசிசிஐ ரோஹித் சர்மாவை டி20 உலகக் கோப்பை கேப்டனாக கொண்டுவர ஆர்வமாக இருக்கிறது. ஆனால் விராட் கோலியை பேட்டிங்கில் துவக்க வீரராகவோ அல்லது மூன்றாவது வீரராகவோ கொண்டு வருவதற்கு பிசிசிஐ விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

- Advertisement -

இந்த காரணத்தினால் விராட் கோலியே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து விலகிக் கொள்ள பிசிசிஐ வித்தியாசமான முறையில் விராட் கோலிக்கு நெருக்கடியை கொடுத்து வருகிறது.

அதாவது இந்தியத் தேர்வுக்குழு விராட் கோலியை சர்வதேச டி20 அணிக்கு தேர்வு செய்யாது. அதே சமயத்தில் விராட் கோலி டி20 உலகக் கோப்பையில் விளையாட விரும்பினால் இடம் தரப்படும் என்று பிசிசிஐ கூறுகிறது.

விராட் கோலி விரும்பினால் இடம் தர முடியும் என்றால், தேர்வுக் குழுவை அவரை உலகக்கோப்பை இந்திய அணிக்கு தேர்வு செய்யலாம். ஆனால் டி20 உலகக் கோப்பையின் மொத்த அழுத்தத்தையும் விராட் கோலியின் தலையில் வைப்பதற்கான வேலையை பிசிசிஐ செய்கிறது. அவர் இடம்பெற்று அணி தோல்வி அடைந்தால் அதன் மொத்த அழுத்தமும் விராட் கோலிக்கு போக வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். தற்பொழுது இது ரசிகர்களை மிகுந்த கோபமடைய வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!