“பிசிசிஐ இத செய்யுங்க.. அப்பதான் கூட்டம் வரும்.. இல்லனா கிரவுண்ட் காலியாதான் இருக்கும்!” – சேவாக் அதிரடி அட்வைஸ்!

0
800
Sehwag

உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஆதிக்க சக்தியாக இந்தியா இருந்து வருகிறது. அதன் ஒரு அடையாளமாக உலகத்திலே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் குஜராத் அகமதாபாத் நகரில் அமைந்திருக்கிறது.

இந்தியாவில் நடைபெறும் முக்கியமான ஆட்டங்கள் அனைத்தும் குஜராத் அகமதாபாத் மைதானத்திற்கு சமீபக் காலத்தில் ஒதுக்கப்பட்டு வருகிறது. மைதானத்தின் வசதிகள் வீரர்களுக்கு மிகுந்த சௌரியத்தை கொடுக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது.

- Advertisement -

இதையெல்லாம் கருத்தில் கொண்டு இந்தியாவில் தற்பொழுது துவங்கப்பட்டு இருக்கும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் முதல் ஆட்டம் குஜராத் அகமதாபாத் மைதானத்திற்கு ஒதுக்கப்பட்டது.

மேலும் இந்த மைதானத்திற்கு உலகக் கோப்பையின் லீக்ஆட்டங்கள் மற்றும் இறுதிப் போட்டியும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. மிகப்பெரிய மக்கள் கூட்டத்தின் முன்னாள் போட்டிகள் நடைபெற வேண்டும் என்று ஐசிசி மற்றும் பிசிசிஐ விரும்புகிறது.

ஆனால் எதார்த்த நிலைமையோ வேறாக இருக்கிறது. இன்று உலகக்கோப்பை துவக்க போட்டிக்கு குஜராத் அகமதாபாத் மைதானத்தில் ரசிகர்களின் வரவேற்பு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதை விட, எதிர்பாராத அளவுக்கு மிக மோசமாக இருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது சமூக வலைதளங்களில் இது குறித்து ரசிகர்கள் தங்களுடைய கடுமையான கண்டனங்களை பிசிசிஐக்கு பதிவு செய்து வருகிறார்கள். பள்ளி விடுமுறை மாதங்களான கோடை காலத்தில் உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெறுவது தான் சரியான ஒன்று என கூறப்படுகிறது.

இந்த நிலையில் உலக கோப்பையின் மீதமுள்ள எல்லா போட்டிகளுக்கும் மைதானங்களுக்கு மக்களை வரவழைப்பதற்கு இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் வீரேந்திர சேவாக் தன்னுடைய ஆலோசனையை முன் வைத்திருக்கிறார்.

இதுகுறித்து சேவாக் கூறும்பொழுது
“மக்கள் வேலை நேரம் முடிந்து மைதானத்திற்கு வருவார்கள் என்று நம்புகிறேன். ஆனால் இந்தியா விளையாடாத போட்டிகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச டிக்கெட்டுகள் நிச்சயம் கொடுக்கப்பட வேண்டும்.

50 ஓவர் கிரிக்கெட்டில் ரசிகர்களுக்கு ஆர்வம் குறைந்து வருகின்ற காரணத்தினால், இளைஞர்கள் மைதானத்திற்கு வருவதற்கு இது நிச்சயம் உதவி செய்யும். ஒரு உலகக்கோப்பை போட்டியில் வீரர்கள் மக்களின் முன்னால் விளையாடுவதற்கு இதுதான்!” வழி என்று கூறியிருக்கிறார்!