பிசிசிஐயின் புதிய ஒப்பந்தம் பட்டியல்.. ரஹானே அதிரடி நீக்கம்? யாருக்கு எவ்வளவு ஊதியம்

0
2991

இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷுப்மான் கில் ஆகியோரின் ஆண்டு சம்பளத்தை உயர்த்த பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது.  தற்போது சி பிரிவில் உள்ள சூர்யகுமார் மற்றும் கில் இருவரும் பி-க்கு முன்னேற வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் இந்தியாவின் அடுத்த டி20 கேப்டனாக இருக்கும் ஹர்திக் பாண்டியா  ஏ-பிரிவுக்கு க்கு முன்னேற உள்ளார். விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரின் புதிய ஒப்பந்தங்கள் இந்த மாத இறுதியில் டிசம்பர் 21 அன்று அறிவிக்கப்படும்.

இதே போன்று அஜிங்க்யா ரஹானே மற்றும் இஷான் ஷர்மா ஆகியோர்  B பிரிவில் இருந்து C மாற்றப்பட்டனர். ஆனால்  ஒப்பந்தப் பட்டியலில்  இருந்து முற்றிலும் வெளியேறும் அபாயத்தில் உள்ளனர். இஷாந்த் கடைசியாக 2021 நவம்பரில் இந்தியாவுக்காகவும், ரஹானே இந்த ஆண்டு ஜனவரியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும் ஒரு டெஸ்டில் விளையாடினார்.

- Advertisement -

A பிரிவு ஊதியத்தின்படி அதிகபட்சமாக உள்ளது, இதில் உள்ள வீரர்கள் ஆண்டுக்கு ₹7 கோடி பெறுகிறார்கள். ஏற்கனவே கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், முகமது ஷமி, அஷ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம்பெற்றுள்ள பி.யில், வீரர்களுக்கு ₹5 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது. C பிரிவில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் ஆண்டுக்கு ₹3 கோடி சம்பாதிக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை  பங்களாதேஷுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசிய இஷான் கிஷன், சி பிரிவில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு 41 போட்டிகளில் 1500 ரன்களுக்கு மேல் குவித்துள்ள சூர்யகுமார் இந்தியாவின் சிறந்த வீரராக உள்ளார். மறுபுறம், கில் 

இந்த ஆண்டு 22 போட்டிகளில், கில் 5 அரை சதங்கள் மற்றும் ஒரு  சதத்துடன் 743 ரன்கள் குவித்துள்ளார். இந்தியா மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஜிம்பாப்வேயில் தொடரை வென்றபோது அவர் அதிக ஸ்கோராக இருந்தார், மேலும் சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஆட்டமிழக்காமல் 50 மற்றும் 45 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -