நேற்று போட்டி முடிவடைந்ததும் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்காததற்கு தண்டிக்க முடியாது என பிசிசிஐ தரப்பில் அதிரடியான பதில் கூறப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் காஷ்மீரில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்திய வீரர்கள் நேற்று பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கவில்லை. இது போட்டி விதிமுறைகளுக்கு எதிரானது எனவே இந்திய அணி தண்டிக்கப்படும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.
நேற்று இந்திய திட்டங்கள் நடந்து கொண்ட விதத்திற்கு எதுவும் செய்யாத போட்டி நடுவரை உடனடியாக ஆசிய கோப்பை தொடரில் இருந்து நீக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இந்திய அணி மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கலாம் என ஆலோசித்து வருகிறது.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து முதல் முறையாக இந்திய கிரிக்கெட் வாரியம் தனது மௌனத்தை கலைத்து அதிரடியான பதிலை கூறியிருக்கிறது. தங்களின் அணியை எந்த விதத்திலும் தண்டிக்க முடியாது என அழுத்தம் திருத்தமாக தெரிவித்து இருக்கிறது. மேலும் அதற்கான காரணத்தையும் விளக்கி இருக்கிறது.
இது குறித்து பிசிசிஐ தரப்பில் கூறும் பொழுது ” நீங்கள் கிரிக்கெட் விதி புத்தகத்தை எடுத்து பார்த்தால் அது போட்டி முடிந்ததும் வீரர்கள் கைகுலுக்கி கொள்ளவேண்டும் என எந்தவிதமான சட்டங்களும் இல்லை. இதை ஒரு நல்லெண்ண செயல்பாடாக எல்லா விதமான தொடர்களிலும் உலகம் முழுவதிலும் பின்பற்றப்படும் சட்டமாகவும் இது கிடையாது”
இதையும் படிங்க : பாக் கேப்டன் கோச் வாயில ஆடறத நிறுத்துங்க.. ஷாகின் டென்னிஸ் பால் பவுலர் அபிஷேக்குக்கு – ஸ்ரீகாந்த் விமர்சனம்
“சட்டமே இப்படி இருக்கும் பொழுது கட்டாயம் இந்திய அணி கைகுலுக்கி இருக்க வேண்டும் என்கின்ற அவசியமே கிடையாது. இப்படி இருக்கும் பொழுது இந்த நிகழ்வால் எந்த விதமான உறவிலும் யாரும் எரிசலை ஏற்படுத்தவில்லை. எனவே இந்திய அணியை தண்டிக்க முடியாது” என கூறப்பட்டிருக்கிறது.