ஐபிஎல் புதிய விதி.. பிசிசிஐ வைத்த செம டிவிஸ்ட்.. அணிகள் குழப்பம்!

0
3173

வரும் 2023 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர்ஸ் என்ற புதிய விதிமுறை அமல்படுத்த பிசிசிஐ திட்டப்பட்டுள்ளது. அதன்படி ஆட்டத்தில் ஏதேனும் ஒரு வீரருக்கு பதிலாக வேறு வீரரை மாற்றிக் கொள்ளலாம். உதாரணத்துக்கு ருத்துராஜ் கெய்க்வாட் பேட்டிங் இருக்கு பயன்படுத்திக் கொண்டு, இரண்டாவது இன்னிங்ஸில் அவருக்கு பதில் வேறு ஒரு பந்துவீச்சாளரை பிளேயிங் லெவனில் கொண்டு வரலாம்.

- Advertisement -

ஏற்கனவே இந்த விதியை சோதனை முயற்சியாக சையது முஸ்தாக் அலி தொடரில் பிசிசிஐ பயன்படுத்தியது. இது பெரும் வெற்றி பெற்றதை அடுத்து ஐபிஎல் தொடரிலும் செயல்படுத்தப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால், அணி நிர்வாகிகள் திறமை வாய்ந்த வெளிநாட்டு வீரர்களை பயன்படுத்தலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தனர். அதற்கு ஆப்பு வைக்கும் விதமாக பிசிசிஐ இந்த விதியில் முக்கியமான மாற்றத்தை கொண்டு வர உள்ளது. புதிய விதியால் இந்திய வீரர்கள் பாதிக்க கூடாது என்பதற்காக இம்பேக்ட் வீரர்களாக இந்தியர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும் என்று பி சி சி ஐஅறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அதன்படி எந்த ஒரு வெளிநாட்டு வீரருக்கு பதிலாக இந்திய வீரரே இம்பேக்ட் வீரராக தேர்வு செய்யப்படுவார். அதேபோன்று இந்திய வீரருக்கு பதிலாக மற்றொரு இந்திய வீரருக்கே வாய்ப்பு வழங்கப்படும்.  இதன் மூலம் வெளிநாட்டு வீரர்கள் நான்கு பேர் தான் இடம்பெற முடியும் என்ற விதியில் எந்த மாற்றமும் இருக்காது என்று பிசிசிஐ  வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்த இம்பேக்ட் வீரர்கள் விதி தேவையற்றது என்று ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.

கிரிக்கெட்டின் சுவாரசியமே தேர்வு செய்யப்பட்ட வீரர் சரியாக விளையாடுகிறாரா இல்லையா என்பதை பொறுத்து தான் உள்ளது என்றும், அவர்களை விளையாடிக்கொண்டிருக்கும் போது மாற்றுவது சரியாக இருக்காது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 31 முதல் மே 28-ம் தேதி வரை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. முதல் போட்டி அகமதாபாத் நடக்க இருப்பதாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.