டி20 உலகக் கோப்பை 2024

பயிற்சியாளர் இன்டர்வியூ.. கம்பீரிடம் பிசிசிஐ கேட்ட முக்கியமான 3 கேள்விகள்.. வெளியாகி இருக்கும் புதிய விபரங்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணலில் கவுதம் கம்பீர் கலந்து கொண்டிருக்கிறார். அவருடன் மற்றொரு இந்திய முன்னாள் வீரரான டபிள்யு.வி ராமன் போட்டியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் நேர்காணலில் கம்பீரிடம் கேட்கப்பட்ட மூன்று முக்கிய கேள்விகள் என்னவென்று வெளியாகியிருக்கிறது.

- Advertisement -

ராகுல் டிராவிட் பதவிக்காலம் இந்த மாதம் இறுதியுடன் முடிவுக்கு வருகிறது. ஆனால் அவர் மேற்கொண்டு இந்திய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை. அவர் தன் குடும்பத்துடன் மற்றும் மகன்களின் எதிர்காலத்தில் கவனம் செலுத்த இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய அணிக்கான புதிய பயிற்சியாளர் தேடலில் பல முன்னணி வெளிநாட்டு பயிற்சியாளர்கள் பெயர்கள் அடிபட்டன. மேலும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருந்து வந்த விவிஎஸ் லட்சுமணன் பெயரும் அடிபட்டது. ஆனால் கடைசியாக கம்பீரே முன்னணியில் இருக்கிறார்.

இந்திய பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணலில் கலந்து கொண்ட கம்பீரிடம் மூன்று முக்கிய கேள்விகள் கேட்கப்பட்டிருக்கிறது. அந்த மூன்று கேள்விகளுக்கும் தெளிவான பதில் இருந்தாலே, அவரால் நிச்சயம் இந்தியா போன்ற ஒரு பெரிய அணியை வழிநடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அணியின் பயிற்சியாளர்கள் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன?
பேட்டிங் மற்றும் பௌலிங் யூனிட்டில் இருக்கும் வயதான வீரர்களை மாற்றக்கூடிய காலகட்டத்தை நீங்கள் எப்படி கையாளுவீர்கள்?
ஸ்பிலிட் கேப்டன்சி, உடல் தகுதியைப் பேணுவதற்கான பணிசுமை மேலாண்மை மற்றும் ஐசிசி அணியின் தோல்வி குறித்து உங்களுடைய கருத்துக்கள் என்ன? இந்த மூன்று கேள்விகள் கம்பீரிடம் கேட்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க : இங்கிலாந்து பிளேயர்ஸ் மெசேஜ் பண்ணாங்க.. பாவம் ரொம்ப பீதி ஆயிட்டாங்க – மேக்ஸ்வெல் சுவாரசிய தகவல்

மேலும் கம்பீருக்கு போட்டியாளராக கூறப்படும் டபுள்யு.பி.ராமன் பேசும்பொழுது “ஐபிஎல் தொடரில் நான் எப்பொழுதும் கம்பீரை சிறந்த கேப்டன்களில் ஒருவராக மதிப்பிட்டு இருக்கிறேன். அவர் தீவிரமானவராக இருப்பதுடன் சிறப்பான திட்டங்களைத் தீட்டுவார். அவருடைய வெற்றி முழுவதும் அவருடைய சொந்த முயற்சியில் இருந்து வருகிறது. அவருடையகிரிக்கெட்டில் அவர் உறுதியாக இருந்தார். மற்றவர்களின் எதிர்பார்ப்புக்கு இணங்கவில்லை. அவர் இந்திய பயிற்சியாளர் பதவியை ஏற்றுக்கொண்டால், அவருக்கு எனது நல்வாழ்த்துக்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts