இங்கிலாந்து பிளேயர்ஸ் மெசேஜ் பண்ணாங்க.. பாவம் ரொம்ப பீதி ஆயிட்டாங்க – மேக்ஸ்வெல் சுவாரசிய தகவல்

0
1180
Maxwell

நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதிய போட்டிக்கு பின்னால் சுவாரசியமான நிறைய விஷயங்கள் நடந்தது. தற்போது இது குறித்து ஆஸ்திரேலியா அணியின் கிளன் மேக்ஸ்வெல் முக்கியமான விஷயம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இங்கிலாந்து அணி தற்பொழுது சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. ஆனால் முதல் சுற்றின் நடுவில் இங்கிலாந்து நமிபியா அணியை வெல்ல வேண்டும், ஆஸ்திரேலியா ஸ்காட்லாந்து அணியை வெல்ல வேண்டும், அப்பொழுதுதான் இங்கிலாந்து சூப்பர் 8 சுற்றுக்கு வர முடியும் என்கின்ற நிலை இருந்தது.

- Advertisement -

இப்படியான நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் ஹேஸில் வுட் இங்கிலாந்து அடுத்த சுற்றுக்கு வராமல் இருப்பது தங்களுக்கு நல்லது எனவும், தாங்கள் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக போட்டியை கடைசிவரை எடுத்துச் சென்று வென்றால் கூட இங்கிலாந்து வெளியே சென்று விடும் என்பதாகவும் பேசி இருந்தார். இது அந்த நிலையில் பெரிய சர்ச்சையான விஷயமாக மாறியது.

மேலும் குறிப்பிட்ட போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடி ஆஸ்திரேலியா மூன்று விக்கெட்டுகளை 30 ரன்களுக்கு இழந்தது. ஹெட் மற்றும் ஸ்டோய்னிஸ் அதிரடி அரைசதங்கள் அடித்து அணியைக் காப்பாற்றினார்கள். ஆனாலும் கடைசி நான்கு பந்தில் மூன்று ரன்கள் என்கின்ற நிலையில் வந்து ஆட்டம் நின்றது. பிறகு டிம் டேவிட் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் கிளன் மேக்ஸ்வெல் “மூன்று பந்தில் மூன்று உரங்கள் தேவைப்பட்ட பொழுது டிம் டேவிட் தந்த கேட்ச்சை அவர்கள் கைவிட்ட இடத்தில் ஆட்டத்தில் சுவாரசிய பகுதி இருந்தது. கடைசி இரண்டு மூன்று பந்துகளில் என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும்? அதிர்ஷ்டவசமாக நாங்கள் எல்லையைத் தாண்டி வெற்றி பெற்றோம். ஹோட்டலில் இருந்த இங்கிலாந்து அணியினர் பீதியில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் விமானத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்தல் இல்லை கேன்சல் செய்தல் போன்ற விஷயங்களை பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக இருந்திருக்கும்.

இதையும் படிங்க : 325 ரன்.. மந்தனா மெகா சதம்.. ஹர்மன்பிரீத் அதிரடி சதம்.. புது வரலாற்று சாதனை

ஆமாம் எங்காவது தரப்பிலிருந்து சில மெசேஜ்கள் இருந்தது. அது உண்மையில் மிகவும் வேடிக்கையாக இருந்தது. நாங்கள் இதைச் செய்வோமா? நாங்கள் இங்கிலாந்தை உள்ளே வர விடுவோமா? இதுமிகவும் சுவாரசியமான ஆட்டமாக இருந்தது? போன்றவைகள் இடம் பெற்று இருந்தது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -