முன்னாள் மும்பை வீரரை புதிய தேர்வுக்குழு தலைவரை நியமித்தது பிசிசிஐ!

0
601

புதிய தேர்வுக்குழு தலைவரை நியமித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ.

பிசிசிஐ தேர்வுக்குழு சேர்மன் பொறுப்பில் இருந்த சேத்தன் சர்மா மீது நடத்தப்பட்ட ரகசிய ஆப்ரேஷனில் இந்திய அணி நிர்வாகம் குறித்து பல தகவல்களை வெளியில் உளறினார். அணி நிர்வாகத்தின் ரகசியம் காக்க தவறினார் என்று மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.

- Advertisement -

இந்த விவகாரத்திற்கு பின், கடந்த பிப்ரவரி மாதம் பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். விலகுவதற்கு சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு தான் தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்வுக்குழுவின் தலைவர் பொறுப்புக்கு இவர் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட ஐந்து மாத காலம் தேர்வு குழு தலைவர் பொறுப்பு காலியாக இருந்தது. அந்த பொறுப்பிற்கு யாரை நியமிப்பார்கள்? என்கிற எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருந்தது.

ஏனெனில் இந்த வருடம் ஆசியக்கோப்பை, 50 ஓவர் உலகக்கோப்பை என வரிசையாக மிகப்பெரிய தொடர்கள் வருவதால் தேர்வுக்குழு சேர்மன் பொறுப்பு அதிகம் கவனிக்கோடிய பொறுப்பாகும்.

- Advertisement -

இந்த பொறுப்பிற்கு பல முன்னாள் வீரர்கள் மற்றும் உள்ளூர் போட்டிகளில் பயிற்சியாளராக இருந்து வருபவர்கள் நியமித்தனர். அந்த வகையில் முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் அஜித் அகர்கர் விண்ணப்பித்திருந்தார்.

அஜித் அகர்கர் ஏற்கனவே மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் தேர்வு குழு அதிகாரியாக பொறுப்புகளை வகித்து வந்தார். அதன் பின் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இரண்டாம் கட்ட பயிற்சியாளராகவும் இருந்து வந்தார். இந்திய அணியில் 9 வருடங்கள் விளையாடியுள்ளார். விண்ணப்பித்தவர்களில் இவரது புரஃபைல் கவனம் பெற்றதாக இருந்தது.

அத்துடன் கடந்த வாரம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் இவரை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டது. அப்போதே அஜித் அகர்கர் தான் அடுத்த தேர்வுக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுவிட்டார். அதனால் தான் டெல்லி கேப்பிடல்ஸ் அணி பொறுப்பிலிருந்து விடுவித்தது என்கிற செய்திகள் பரவின ஆனால் அப்போது அதிகாரப்பூர்வமான செய்திகள் வெளிவரவில்லை வதந்திகளாகவே இருந்தது.

மூன்று பேர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனைக்குழு தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு வந்த விண்ணப்பங்களை பரிசீலித்து அவர்களை நேர்காணலும் எடுத்தது. அதன் அடிப்படையில் அஜித் அகர்கர் தேர்வுக்குழுவிற்கு சரியாக இருப்பார். மேலும் அவரை சேர்மன் பொறுப்பிலும் நியமிக்கலாம் என்று பிசிசிஐக்கு அறிக்கை தந்திருக்கிறது.

கிரிக்கெட் ஆலோசனைக் குழு அளித்த அறிக்கையின் படி அஜித் அகர்கர் தேர்வுக்குழுவில் ஏற்கனவே இருக்கும் நான்கு பேருடன் ஐந்தாவது அதிகாரியாக சேர்க்கப்பட்டிருக்கிறார். அத்துடன் இந்த தேர்வுக்குழுவிற்கு சேர்மன் ஆகவும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

அஜித் அகர்கர் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக 1998ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை விளையாடியுள்ளார். கடைசியாக தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு விளையாடினார். அதன் பிறகு சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. ஓய்வும் பெற்று மும்பை கிரிக்கெட் அசோசியேஷனில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வந்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகள், 191 ஒருநாள் போட்டிகள் மற்றும் நான்கு டி20 போட்டிகளில் அஜித் அகர்கர் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.