சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றிய நிலையில் பிசிசிஐ இந்திய அணிக்கு 58 கோடி ரூபாய் பரிசுத் தொகையை அறிவித்தது.
இந்த சூழ்நிலையில் அதில் யார் யாருக்கு எவ்வளவு பிரித்து வழங்கப்படும் என்கிற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
பிசிசிஐ அறிவித்த பரிசுத்தொகை
சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற நிலையில், இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. இந்த சூழ்நிலையில் வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இந்திய கிரிக்கெட் வாரியம் அவர்களுக்கு 58 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்தது. அதுமட்டுமல்லாமல் ஐசிசி சார்பில் வெற்றி பெறும் அணிக்கு 20 கோடி ரூபாய் ஏற்கனவே அறிவித்த நிலையில் அதனையும் இந்திய அணி பெற்றுள்ளது.
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பரிசுத்தொகையை விட இந்த ஆண்டு 53 சதவீதம் அதிகமாகும். இந்த 20 கோடி ரூபாயும் இந்திய வீரர்களுக்கு மட்டுமே பகிர்ந்து அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பிசிசிஐ அறிவிக்கப்பட்ட 58 கோடி ரூபாயில் இந்திய வீரர்கள், பயிற்சியாளர் குழு, தேர்வாளர் குழு என ஒவ்வொரு பிரிவில் பணிபுரிந்தவர்களுக்கு பரிசுத்தொகை குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
யார் யாருக்கு எவ்வளவு
இதில் பிசிசிஐ அறிவித்த 58 கோடி ரூபாய் பரிசுத் தொகையில், இந்திய அணியில் இடம் பெற்று இருந்த 15 வீரர்களும் தலா 3 கோடி ரூபாய் பெறுவார்கள். மேலும் இதே 3 கோடி ரூபாயை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பெறுகிறார். இதில் அவரது குழுவின் ஒவ்வொரு உதவி பயிற்சியாளரும் 50 லட்சம் பெறுகிறார்கள். இதில் இந்திய அணியை தேர்வு செய்த தலைமை தேர்வாளர் அஜித் அவர்கள் ரூபாய் 30 லட்சம் பெறுகிறார்.
இதையும் படிங்க:கோலிகிட்ட இதை கேட்கவே ரொம்ப தயங்கினேன்.. ஆனா என்ன புரிஞ்சு அவர் செஞ்சத நம்பவே முடியல – நிதீஷ் ரெட்டி சுவாரஸ்யம்
அந்தக் குழுவில் மற்ற 4 தேசிய தேர்வாளர்கள் 25 லட்சம் பெறுகிறார்கள். மேலும் துபாயில் இந்திய அணியில் இடம் பெற்று இருந்த பிசிசிஐ ஊழியர்களுக்கும் தல 25 லட்சம் பரிசுத்தொகை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மொத்தமாக 58 கோடி ரூபாயை இந்திய கிரிக்கெட் வாரியம், அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.






