ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிசிசிஐ அறிவித்த ஊக்கத் தொகை

0
461
Neeraj Chopra BCCI

ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாக பல வீரர்கள் பங்கேற்றனர். எந்த முறையும் இல்லாத வண்ணமாக இந்த முறை 7 பதக்கங்களை இந்திய அணி வென்று உள்ளது அதில் 2 வெள்ளி, 3 வெண்கலம் ஒரு தங்கம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்று வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது.

பேட்மிண்டன் விளையாட்டில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். அதே போல் மற்றொரு வீராங்கனையான லாவ்லினா குத்துச்சண்டை போட்டியில் வெண்கலம் வென்றார். சுமார் 41 ஆண்டுகளுக்கு பிறகு ஆடவர் ஹாக்கி அணியும் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளது.

பளு தூக்குதலில் மிரா பாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார். மல்யுத்த வீரர் ரவி குமார் தஹியாவும் வெள்ளி வென்றார். எல்லாவற்றிற்கும் மேலாக ஈட்டி எறிதலில் நிராஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார்.

இந்திய திரு நாட்டுக்கு பெருமை சேர்த்த இத்தனை வீரர், வீராங்கனைகளுக்கும் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான BCCI அமைப்பு சார்பாக ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கம் வென்ற நிராஜ் சோப்ராவுக்கு ஒரு கோடி ரூபாயும், வெள்ளி வென்ற மிரா பாய் சானு மற்றும் ரவி குமார் தஹியாவுக்கு தலா 50 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெண்கலம் வென்ற பி.வி.சிந்துவுக்கு 25 லட்சமும், ஹாக்கியில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்கு 1.25 கோடி ரூபாயும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்ட ஜெய் ஷா, “நமது வீரர் வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு நமது தேசத்திற்கு பெருமை தேடி தந்துள்ளனர். BCCI சார்பாக அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்” என்று கூறியுள்ளார்.