இந்தியா இலங்கை தொடரில் ட்விஸ்ட்.. புது அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ.. 4 போட்டிகள் மாற்றம்

0
303

தற்போது நடைபெற்று வரும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரை முடித்தவுடன் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளது.

இந்த சூழ்நிலையில் ஏற்கனவே ஒரு அட்டவணையை வெளியிட்டிருந்த பிசிசிஐ தற்போது திருத்தி அமைக்கப்பட்ட மறு அட்டவணையை வெளியிட்டு இருக்கிறது.

- Advertisement -

டி20 உலக கோப்பையில் பங்கு பெற்ற இந்திய முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்கள் தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வேவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ள நிலையில் அடுத்ததாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாள் மற்றும் டி20தொடர்களில் பங்கேற்க உள்ளது.

இதில் ஜிம்பாப்வே தொடருக்கு ஓய்வு அளிக்கப்பட்ட முன்னணி வீரர்கள் இந்த தொடருக்கு திரும்பும் நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 ஃபார் மெட்டில் இருந்து தங்களது ஓய்வை அறிவித்து விட்டனர். இதனால் டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படுவார் என்று தெரிகிறது. அதேபோல ஒரு நாள் தொடருக்கு கேப்டனாக கேஎல் ராகுல் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அவருக்கு கேப்டனாக வழி நடத்திய அனுபவம் இருப்பதால் இந்தத் தொடரிலும் அவரே செயல்படலாம்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் டி20 போட்டிகள் ஜூலை 26, 27 மற்றும் 29ஆம் தேதிகளில் நடைபெற இருந்த நிலையில் அதற்கு பதிலாக ஜூலை 27, 28 மற்றும் 30ம் தேதிகளில் பல்லேகேலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கின்றன. அதேபோல ஒரு நாள் போட்டிகள் ஆகஸ்ட் 1,4 மற்றும் 7ம் தேதிகளில் நடைபெற இருந்த நிலையில் 2, 4 மற்றும் 7ம் தேதிகளில் நடைபெற உள்ளன. இந்த மூன்று ஒரு நாள் போட்டிகள் அனைத்தும் கொழும்புவில் நடைபெற இருக்கின்றன.

டி20 ஃபார்மெட்டில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான பும்ரா ஆகியோருக்கான ஓய்வு நீட்டிக்கப்பட்டுள்ளதால் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை இவர்கள் இழக்க நேரிடும். இதனால் ஒருநாள் தொடருக்கு ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் களமிறங்கவாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.

இதையும் படிங்க:ரோகித்துக்கு நான் செஞ்ச அதை எல்லாரும் மறந்துட்டாங்க.. இனி நானே கோச் ஆகறேன் – சவுரவ் கங்குலி பேட்டி

ஜிம்பாவே அணிக்கு எதிராக டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்கள் எத்தனை பேர் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இடம் பெறுவார்கள் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம். சமீபத்தில் டி20 உலக கோப்பையில் மோசமான தோல்வியை சந்தித்த இலங்கை கிரிக்கெட் அணியும் விளையாட்டை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இலங்கை அணியின் முன்னாள் வீரரான ஜெயசூர்யா புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -