இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி ரோகித் சர்மாவை தான் கேப்டனாக கொண்டு வந்த பொழுது தன்னை விமர்சித்தவர்கள் இப்பொழுது காணாமல் போய்விட்டார்கள் என்று பேசி இருக்கிறார்.
இந்த நிலையில் சவுரவ் கங்குலி ஐபிஎல் தொடரில் பயிற்சியாளர் குழுவில் இருக்கும் டெல்லி கேப்பிட்டல் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரிக்கி பாண்டிங் விலகி இருக்கிறார். இதன் காரணமாக அங்கு புதிய பயிற்சியாளரை கொண்டுவர வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.
மேலும் விராட் கோலி இந்திய கிரிக்கெட்டில் மூன்று வடிவத்தில் கேப்டன் பொறுப்பில் இருந்து நகர்ந்து கொண்ட பொழுது, சவுரவ் கங்குலி ரோகித் சர்மாவிடம் பேசி கேப்டனாக கொண்டு வந்தார். அந்த நேரத்தில் அவர் மீது நிறைய விமர்சனங்கள் இருந்தன. மேலும் அவரே ராகுல் டிராவிடை வற்புறுத்தி தலைமை பயிற்சியாளராகவும் கொண்டு வந்தார். இந்தக் கூட்டணி தற்பொழுது டி20 உலகக் கோப்பை தொடரை கைப்பற்றிய
இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விஷயங்கள் குறித்து சவுரவ் கங்குலி பேசும் பொழுது “நான் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ரோகித் சர்மாவிடம் ஒப்படைத்த பொழுது அனைவரும் என்னை விமர்சனம் செய்தார்கள். இப்போது ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி உலகக் கோப்பையை வென்று இருப்பதால் அப்படியான விமர்சனங்கள் எல்லாம் நின்றுவிட்டது. மேலும் நான் ரோகித் சர்மாவை கேப்டனாக கொண்டு வந்ததையும் அவர்கள் மறந்து விட்டார்கள்.
நான் அடுத்து ஐபிஎல் தொடரை திட்டமிட்டு இருக்கிறேன். இந்த முறை ஐபிஎல் கோப்பையை டெல்லி அணி கைப்பற்ற வேண்டும். டெல்லி அணிக்கு ஒரு இந்திய தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் வருவது குறித்து நான் அந்த அணி நிர்வாகத்திடம் பேச இருக்கிறேன்.
இதையும் படிங்க : ஹெவி ரோலர்தான் எங்க தோல்விக்கு காரணம்.. இத மட்டும் செஞ்சா நாங்க தலை நிமிர்ந்து இருப்போம் – சிக்கந்தர் ராஸா பேட்டி
நானே டெல்லி அணிக்கு ஐபிஎல் தொடரில் தலைமை பயிற்சியாளராக வர விரும்புகிறேன். நான் சில புதிய வீரர்களை டெல்லி அணிக்கு கொண்டு வரவும் விரும்புகிறேன். டெல்லி அணிக்கு சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் விளையாடும் ஜேமி ஸ்மித்தை ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு கொண்டு வர விரும்பினேன். ஆனால் அவருடைய அட்டவணைகள் சரியாக அமையாத காரணத்தினால் அதை செய்ய முடியவில்லை” என்று கூறி இருக்கிறார்.






