பிசிசிஐ அதிரடி.. விவிஎஸ் லக்ஷ்மன் இல்லை.. இந்தியாவுக்கு புதிய பயிற்சியாளர் அறிவிப்பு அயர்லாந்து தொடருக்காக!

0
2185

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் யில் சுற்றுப்பயணம் செய்து டி20 போட்டி தொடர்களில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் நான்காவது மற்றும் ஐந்தாவது டி20 போட்டிகள் அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் இன்றும் நாளையும் நடைபெற இருக்கிறது .

இதனைத் தொடர்ந்து இந்தியா அயர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகளை கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது . அயர்லாந்து சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணிக்கு பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார் . ஆசியக் கோப்பை மற்றும் உலக கோப்பையை கருத்தில் கொண்டு சமீபகாலமாக டி20 போட்டிகளுக்கு கேப்டனாக பொறுப்பேற்று வந்த ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது .

- Advertisement -

இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி பும்ரா தலைமையில் மூன்று டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதற்கு முன்பு பும்ரா இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியை தலைமை ஏற்று வழி நடத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியை பொறுத்தவரை பும்ரா மற்றும் பிரதீஷ் கிருஷ்ணா ஆகியோரின் பார்ம் மற்றும் உடல் தகுதி முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்தப் போட்டிகளில் அவர்கள் எவ்வாறு விளையாடுகிறார்கள் என்பதை பொறுத்தே ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை அணியில் அவர்களுக்கான வாய்ப்பு உறுதி செய்யப்படும்

மேலும் இந்த தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளர் ஆன ராகுல் டிராவிட் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் ஆகியோருக்கும் ஓய்வடிக்கப்பட்டு இருக்கிறது. இவர்களும் ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை போட்டிகளை கருத்தில் கொண்டே ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன கடந்த ஆண்டு அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் இந்தியா அணிக்கு பயிற்சியாளராக தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமை பயிற்சியாளர் ஆன விவிஎஸ் லக்ஷ்மன் பணியாற்றினார்

இந்த முறை அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட்டிருக்கிறார். சௌராஷ்டிராவை சேர்ந்த முன்னாள் வீரரும் தேசிய கிரிக்கெட் அகாடமி இன் பேட்டிங் பயிற்சியாளர் சிதன்ஷு கோடக் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்து வழிநடத்துவார் என்று பிசிசிஐ அறிவித்திருக்கிறது. தேசிய கிரிக்கெட் அகாடமியில் வளர்ந்து வரும் வீரர்களுக்கான முகாம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அவர்களுக்கான பயிற்சியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் விவிஎஸ் லக்ஷ்மன்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து அயர்லாந்து சுற்றுப்பயணத்திற்கு சிதன்ஷு கோடக் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர் இதற்கு முன்பு இந்தியா ஏ அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்து வழிநடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அயர்லாந்து சுற்றுப் பயணம் செல்லும் இந்தியா இளம் அணியுடன் புதிய கேப்டன் மற்றும் புதிய தலைமை பயிற்சியாளரின் கீழ் அயர்லாந்து தொடரை சந்திக்க இருக்கிறது.

அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் திலக் வர்மா ரிங்கு சிங் சிவம் டுபே போன்ற இந்தியாவின் எதிர்கால நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளனர். அடுத்த வருடம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வைத்து நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு ஐபிஎல் போட்டிகள் மற்றும் உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய இளம் வீரர்களை சர்வதேச களத்தில் இறக்கி பரிசோதனை செய்து வருகிறது இந்திய கிரிக்கெட் வாரியம்.