பிசிசிஐ அதிரடி.. மும்பை அணிக்கு திரும்பும் ஸ்ரேயாஸ் ஐயர்.. ஆனால் தமிழ்நாடு அணிக்கு சிக்கல்

0
414
Shreyas

இந்தியத் தேர்வுக் குழுவுக்கு அஜித் அகர்கர் தலைவராகப் பொறுப்பேற்ற பின்பு வீரர்கள் தேர்வில் நிறைய அதிரடியான மாற்றங்கள் தொலைநோக்குப் பார்வையோடு செய்யப்பட்டு வருகின்றன.

அதே சமயத்தில் உள்நாட்டு கிரிக்கெட்டில் வீரர்கள் அனைவரும் பங்கேற்பது குறித்து மிகுந்த கண்டிப்பு காட்டப்பட்டு வருகிறது. உள்நாட்டு கிரிக்கெட்டை காப்பாற்றாவிட்டால் இந்திய கிரிக்கெட்டை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியாது என்பதில் இந்திய கிரிக்கெட் வாரியம் தெளிவாக ஆரம்பித்திருக்கிறது.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணிக்கு தேர்வாகாத வீரர்கள், மேலும் காயத்தில் இல்லாத வீரர்கள் அனைவருமே உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும். மேலும் தங்களது மாநில அணி நிர்வாகத்திற்கு தங்கள் நிலை குறித்து தெரியப்படுத்த வேண்டும் என பிசிசிஐ கண்டிப்பான உத்தரவை வெளியிட்டு இருந்தது.

இந்திய அனைத்து தேர்வாகாத இஷான் கிஷான் தனது மாநில அணியான ஜார்கண்ட் அணிக்கு ரஞ்சி தொடரில் விளையாடவில்லை. ஆனால் ஜார்கண்ட் அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறவில்லை.

அதே சமயத்தில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாத ஸ்ரேயாஸ் ஐயர் காயம் என்று கூறி ரஞ்சி கால் இறுதிப் போட்டியில் மும்பை அணிக்காக களம் இறங்கவில்லை. ஆனால் அவருக்கு காயம் இல்லை என்ற என்சிஏ மருத்துவக் குழு உண்மையை வெளியிட்ட பிறகு பிரச்சனை தீவிரமானது.

- Advertisement -

இவர்கள் இருவரும் பிசிசிஐ சம்பள ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற்றப்படலாம் என்கின்ற தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மும்பை அணி அரையிறுதிக்கு தகுதி பெற்று இருக்கும் காரணத்தினால், ஸ்ரேயாஸ் ஐயர் ரஞ்சி அரை இறுதியில் விளையாடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

அதே சமயத்தில் மார்ச் இரண்டாம் தேதி துவங்கும் அரை இறுதி சுற்றில் தமிழக அணியும் மும்பை அணியும் மோதிக்கொள்ள இருக்கின்றன. ஏற்கனவே மும்பை அணியில் அனுபவம் வாய்ந்த பிரித்வி ஷா மற்றும் கேப்டன் ரகானே போன்றவர்கள் இருக்கும் நிலையில், ஸ்ரேயாஸ் ஐயரும் இணைவது, தமிழக அணிக்கு பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.