“பாபர் ஆஸமிடம் ஸ்டைல் இருக்கு; ஆனால் கேஎல்.ராகுல் தான் சரியானவர்” – ஷேன் வாட்சன் வியப்பு!

0
508
K. L. Rahul

மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் நேற்று பஞ்சாப் மாநிலத்தில் மொகாலி நகரில் ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி பலப்பரீட்சை நடத்தியது.

இந்தப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி 208 ரன்களை குவித்தது. இந்திய அணியில் கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் அதிரடியாக அரைசதம் அடித்து அசத்தினார்கள். சூரியகுமார் யாதவும் மிகச் சிறப்பாக விளையாடி அதிரடியாக 46 ரன்கள் எடுத்தார்.

ஆனாலும் பனிப்பொழிவும், இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக இல்லாத காரணத்தாலும் ஆஸ்திரேலிய அணி இந்த பெரிய இலக்கை துரத்திய இந்திய அணியை கடினப்படாமல் எளிதாகவே வீழ்த்தியது. இந்தத் தோல்வி இந்திய அணி மீது நிறைய விமர்சனங்களை கொண்டு வந்து இருக்கும் போதும், கே எல் ராகுல் நல்ல பேட்டிங் பார்முக்கு வந்திருப்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

இந்த வருடத்தில் அவர் நிறைய போட்டிகளில் பங்கேற்கவில்லை. மேலும் ஐபிஎல் போட்டி முடிந்து குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின் அணிக்கு திரும்பிய அவரால் நல்ல முறையில் பங்களிப்பு அளிக்க முடியவில்லை. ஜிம்பாப்வே மற்றும் ஆசிய கோப்பையில் சொதப்பல் ஆகவே பேட்டிங் செய்தார். ஆனாலும் கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி உடன் ஒரு அரை சதம் அடித்தார். இதையடுத்து நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்கிய அவர் தனது அற்புதமான பேட்டிங் திறமையால் ரசிகர்களுக்கு விருந்து வைத்தார் என்றே கூறலாம். அவரது பேட்டிங் நளினம் அந்த அளவிற்கு மிகச் சிறப்பாக இருந்தது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் கூறும்பொழுது ” ஸ்டைல் என்று பார்க்கும் பொழுது, நான் பார்த்ததில் கேஎல் ராகுல் மிக முக்கியமானவர். வேகம் மற்றும் சுழற்பந்து அவர் அனாயசமாக ஆடுவது பிரமிக்கத்தக்கது. கிரிக்கெட் புத்தகங்களில் இருக்கும் ஷாட்கள் அனைத்தையும் அவர் விளையாடுவார். அவர் விளையாடுவதை பார்க்கும் பொழுது ஆஸ்திரேலிய அணியின் லெஜெண்ட் ஸ்டைலிஷ் பேட்ஸ்மேன் டேமியன் மார்ட்டின் விளையாடுவது போலவே இருக்கும். அவர் பந்தை கடினமாக அடித்தாலும் பார்ப்பதற்கு அவர் மிகவும் அனாயசமாக விளையாடுவது போலத் தான் தெரியும். பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவருக்கும் இந்த ஸ்டைல் உண்டு. ஆனால் அதில் உச்சத்தில் இருப்பவர் கேஎல் ராகுல் தான் ” என்று புகழ்ந்து கூறியிருக்கிறார்!