NO.8 வரை பேட்டிங்.. 6 பவுலிங் ஆப்ஷன்.. டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு அமையுமா?.. வாய்ப்புள்ள பிளேயிங் லெவன்

0
319
ICT

2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு, இந்திய டி20 அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இடம் பெறவில்லை.

இந்த நிலையில் 14 மாதங்கள் கழித்து இந்திய டி20 அணிக்கு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

- Advertisement -

எனவே இவர்கள் அடுத்து வரக்கூடிய டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவார்கள் என்பது தெரிந்த விஷயமாகி இருக்கிறது. திடீரென பேட்டிங் யூனிட்டில் கட்டாயம் இடம் பெறக்கூடிய இரண்டு வீரர்கள் வந்துள்ளதால், ஏற்கனவே வகுக்கப்பட்ட இந்திய டி20 அணித் திட்டங்கள் மாறி இருக்கின்றன.

இதன் காரணமாக இரண்டு இளம் வீரர்கள் எப்படியும் இந்திய டி20 உலகக் கோப்பை அணியில் வாய்ப்பை இழப்பார்கள். மேலும் பேட்டிங் யூனிட்டை அமைப்பதில் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்படும்.

இது மட்டும் இல்லாமல் பேட்டிங் யூனிட்டில் கட்டாயம் எட்டாவது இடம் வரை சிக்ஸர் அடிக்கக்கூடிய பேட்ஸ்மேன் தேவை. மேலும் ஆறாவது பந்துவீச்சாளராக யாராவது கையை சுழற்றி ஆக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை நடக்கின்ற காரணத்தினால், இந்த இடத்தில் ஒரு வேகப்பந்துவீச்சாளர் தேவையில்லை என்பது இந்திய அணிக்குத் தற்போது சாதகமான விஷயமாக மாறி இருக்கிறது.

- Advertisement -

ரோகித் சர்மா, ஜெயஸ்வால், விராட் கோலி, சூரியகுமார் யாதவ் ஹர்திக் பாண்டியா ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, அக்சர் படேல் இல்லை ரவீந்திர ஜடேஜா என பேட்டிங் நீளம் எட்டு வரை அமைக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு.

அதே சமயத்தில் மீதமுள்ள மூன்று இடங்களில் குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஸ்தீப் சிங் இல்லை முகமது சிராஜ் இடம் பெற அதிக வாய்ப்புகள் உண்டு.

இப்பொழுது பேட்டிங் யூனிட்டில் 8 பேட்ஸ்மேன் வருவார்கள். பவுலிங் யூனிட்டில் மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் என ஐந்து பந்துவீச்சாளர்கள் மட்டுமே இருப்பார்கள். இந்த இடத்தில்தான் ஆறாவது பந்துவீச்சாளருக்கான தேவை ஏற்படுகிறது.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்கள் மெதுவாகவும் அதே சமயத்தில் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பேட்டிங் யூனிட்டில் இடம்பெறுகிற ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் இவர்கள் நால்வரில் யாராவது இரண்டு ஓவர்கள் பந்து வீச வேண்டிய அவசியம் இருக்கிறது. இவர்கள் நால்வருமே பகுதி நேரமாக பந்துவீச பயிற்சிகள் எடுத்தவர்கள். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஏற்கனவே வீசியும் இருக்கிறார்கள். எனவே இப்படி செல்வது இந்திய அணியின் பலத்தை அதிகரிக்கும்!