நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் முறையாக பஞ்சாப் கிங்ஸ் மிடில் ஆர்டர் மிகச்சிறப்பாக விளையாட ராஜஸ்தான் ராயல்ஸ் அணிந்து எதிராக ஐந்து விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்து அசத்து இருக்கிறது.
இன்று ஜெய்ப்பூர் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ராஜஸ்தான் ராயல் பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்டது. இந்த நிலையில் இன்று பஞ்சாப் என்றால் பிளே ஆப் சுற்றுக்கு ஏறக்குறைய முன்னேறி விட முடியும் என்கின்ற நிலை காணப்படுகிறது.
பஞ்சாப்பை ஏமாற்றிய விஷயம்
இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பஞ்சாப் துவக்க ஆட்டக்காரர்கள் இருவருமே சொற்ப ரன்களில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்கள். மேலும் மேக்ஸ்வெல் இடத்திற்கு கொண்டுவரப்பட்ட மிட்சல் ஓவன் தனது அறிமுக போட்டியில் ரன்கள் ஏதும் இல்லாமல் ஆட்டம் இழந்தார்.
இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி பவர் பிளேவில் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்து 58 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் வதேரா இருவரும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் தாண்டி பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். ஸ்ரேயாஸ் ஐயர் 25 பந்தில் 30 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
வதேரா – ஷஷான்க் சிங் அபாரம்
இதைத்தொடர்ந்து வதைரா ஒரு முனையில் அதிரடியாக மிகச் சிறப்பாக விளையாடி இந்த சீசனில் இரண்டாவது அரைசதத்தை அடித்தார். அவர் 37 பந்துகளில் ஐந்து பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 70 ரன்கள் எடுத்தார். இறுதி கட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஷஷான்க் சிங் ஆட்டம் இழக்காமல் 30 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 59 ரன்கள் குவித்தார். பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 219 ரன்கள் குவித்தது.
இதையும் படிங்க : விராட் கோலிக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும்.. மத்திய அரசுக்கு ரெய்னா கோரிக்கை
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரையில் எட்டு முறை முதலில் பேட்டிங் செய்திருக்கும் பஞ்சாப் அணி இதில் ஆறு முறை 200 ரன்கள் தாண்டி முதல்முறையாக அசத்தியிருக்கிறது. மேலும் கடந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் இருந்து பேட்டிங் வரிசையில் ஆறாவது மற்றும் அதற்கு கீழே விளையாடி அதிக அரை சதங்கள் அடித்தவராக மூன்று அரை சதங்களுடன் ஷஷான்க் சிங் முதல் இடத்தை பிடித்து அசத்தியிருக்கிறார்.






