மனசு காயமா இருக்கு.. தோல்விக்கு நாங்க தகுதியான ஆளுங்க.. இனி இது தெரிஞ்சிடும் – சிஎஸ்கே கோச் மைக் ஹசி பேட்டி

0
785
Hussey

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி கொல்கத்தா அணிக்கு எதிராக படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு சிஎஸ்கே அணி தகுதியானது என அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி கூறியிருக்கிறார்.

சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து சிஎஸ்கே அணிக்கு எஞ்சி இருக்கும் ஐபிஎல் தொடருக்கு மகேந்திர சிங் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார். கேப்டன் ஏற்பட்டாலும் கூட சிஎஸ்கே அணி மோசமாக விளையாடுவது மாறவில்லை.

- Advertisement -

முதல் முறை மோசமான வரலாறு

சிஎஸ்கே அணி நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வெறும் 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் மிக அதிகபட்சமாக சிவம் துபே 31 ரன்கள் எடுத்தார். திருப்பி விளையாடிய கொல்கத்தா அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து மிக எளிதாக பத்து ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதுவரை 6 போட்டிகளில் ஐந்து போட்டிகளில் சிஎஸ்கே தோல்வி அடைந்திருக்கிறது. இந்த தோல்வி மிகவும் மோசமான தோல்வியாக அமைந்திருக்கிறது.

மேலும் ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே முதல் முறையாக தொடர்ந்து 5 போட்டிகளை தோற்று இருக்கிறது. மேலும் தங்களது சொந்த மைதானமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக மூன்று போட்டிகளை தொடர்ந்து தோற்று இருக்கிறது. இந்த அளவிற்கு சிஎஸ்கேவின் செயல்பாடு நடப்பு ஐபிஎல் தொடரில் மிக மோசமாக இருக்கிறது.

- Advertisement -

உண்மை ரசிகர்கள் யார் என்று தெரியும்

இதுகுறித்து சிஎஸ்கே பேட்டிங் கோச் மைக் ஹசி கூறும்பொழுது ” நேற்றைய தோல்வி எங்களை மிகவும் அதிகமாக காயப்படுத்தி கொண்டு இருக்கிறது. பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் மற்றும் ரசிகர்கள் என எல்லோரையும் இது நிச்சயமாக காயப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்காக நாங்கள் நிறைய விமர்சனங்களை சந்திக்க போகிறோம் என்று எனக்கு தெரியும்”

இதையும் படிங்க : 5 தோல்வி.. இன்னும் சிஎஸ்கேக்கு பிளே ஆப் வாய்ப்பு.. ஆர்சிபி போன வருஷம் செஞ்சத செஞ்சா மட்டும் போதும்.. முழு விபரம்

“உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் இந்த விமர்சனங்களுக்கு மிகவும் தகுதியானவர்களாகவே இருக்கிறோம். ஆனால் இது போன்ற கடினமான நேரங்களில்தான் உங்களுடைய உண்மையான ரசிகர்கள் யார் என்பது தெரிய வரும். நாங்கள் பொறுமையாக உழைத்து மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -