பேட்டிங் பவுலிங் பீல்டிங்; எல்லா ஏரியாவிலும் கலக்கி ஆட்டநாயகன் விருது வாங்கிய ஜடேஜா அசத்தல் பேச்சு!

0
1621
Jadeja

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்து இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நடைபெற்றது!

இந்தப் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர் இடம் பெறவில்லை. இவருக்கு பதிலாக மார்ஷ் இடம் பெற்றார். இந்திய அணியில் 8 மாதங்களுக்குப் பிறகு ரவீந்திர ஜடேஜா ஒருநாள் கிரிக்கெட்டுக்கு திரும்பி வந்தார். வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவரது ஆல்ரவுண்டர் இடத்தில் சர்தார் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

- Advertisement -

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மும்பை வான்கடே மைதானத்தில், ரோகித் சர்மா இல்லாத நிலையில் கேப்டன் பொறுப்பு ஏற்று இருந்த ஹர்திக் பாண்டியா இந்தப் போட்டிக்கான டாஸில் வென்று முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.

முகமது சிராஜ் வழக்கம்போல பவர் பிளேவில் தனது முதல் ஓவரிலேயே டிராவிஸ் ஹெட்டை வழி அனுப்பி வைத்தார். இதற்கு அடுத்து மார்ஷ் ஸ்மித்து ஜோடி அரைசத பார்ட்னர்ஷிப்பையும், அடுத்து மார்ஷ் லபுஷேன் ஜோடி அரை சதை பார்ட்னர்ஷிப்பையும் கொண்டு வந்தார்கள்.

இந்த நிலையில் பந்து வீச வந்த ரவீந்திர ஜடேஜா மிகச் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த மிட்சல் மார்சை 81 ரன்களில் வெளியேற்றினார். அவர் 65 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் இந்த ரன்னை எடுத்தார். அவர் வெளியேறிய போது ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர் 129 ஆக இருந்தது.

- Advertisement -

மிகச் சிறப்பாக விளையாடிய அவரை ரவிந்திர ஜடேஜா வெளியேற்ற, அதற்குப் பிறகு ஆஸ்திரேலியா அணி மேற்கொண்டு 59 ரன்களை எடுப்பதற்குள் ஏழு விக்கட்டுகளை இழந்து 188 ரன்களுக்கு சுருண்டது. இதை அடுத்து விளையாடிய இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒரு கட்டத்தில் மோசமான நிலையில் இருந்த இந்திய அணியை ரவீந்திர ஜடேஜா கே எல் ராகுலுடன் கூட்டு சேர்ந்து மீட்டு வெற்றி பெற வைத்தார். இந்த ஜோடி 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. கேஎல் ராகுல் ஆட்டம் இழக்காமல் 75 ரன்கள், ரவீந்திர ஜடேஜா ஆட்டம் இழக்காமல் 45 ரன்கள் எடுத்தார்கள். மேலும் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் இரண்டு விக்கட்டுகளையும் ஒரு கேட்ச்சையும் பிடித்திருந்தார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா பேசுகையில் ” நான் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு 8 மாதங்களுக்குப் பிறகு திரும்பி வந்து இருக்கிறேன். நான் இந்த வடிவ கிரிக்கெட்டுக்கு ஏற்றவாறு ஆரம்பத்திலேயே மாறிக்கொள்ள நினைத்தேன். அதிர்ஷ்டவசமாக எனக்கு இரண்டு விக்கட்டுகளும் கிடைத்தது. நான் பேட்டிங்கில் ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்க மட்டும்தான் நினைத்தேன். ராகுல் நாங்கள் டெஸ்ட் விளையாடி இங்கு வந்திருக்கிறோம். இங்கு லைன் மற்றும் லென்த் வேறானதாக இருக்கும். இங்கு ஒரே மாதிரி பந்தில் வேகத்தை எதிர்பார்க்க முடியாது. நான் நல்ல இடங்களில் பந்து வீச தேடிக் கொண்டிருந்தேன். எனக்கு பந்தில் கொஞ்சம் திருப்பமும் கிடைத்தது. நான் சரியான ஏரியாக்களில் வீசினால் ஆடுகளம் மற்றதை பார்த்துக் கொள்ளும் என்று நான் முடிவு செய்தேன்!” என்று கூறியிருக்கிறார்!

நடந்து முடிந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை என வென்ற இந்திய அணி தற்பொழுது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வென்று முன்னிலை வகிக்கிறது. அடுத்த போட்டி நாளை மறுநாள் விசாகப்பட்டினத்தில் நடக்கிறது!