சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகிற 19ஆம் தேதி முதல் நடைபெற உள்ள நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி வருகிற 23ஆம் தேதி துபாயில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தும் என அதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் முகமது ரிஸ்வான் தலைமையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராகவும் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்று சொந்த மண்ணில் நடைபெறும் சாம்பியன் டிராபி தொடரில் மிகப்பெரிய நம்பிக்கையை பெற்றுள்ளது. மேலும் பாகிஸ்தான் அணியும் அனுபவம் மற்றும் இளமை என அனைத்தும் சரியான விகிதத்தில் கலந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் மிகப்பெரிய நம்பிக்கையோடு சாம்பியன் டிராபி தொடரில் விளையாட காத்திருக்கிறது. இந்திய அணியைப் பொறுத்தவரை நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் மோசமான தோல்வி சந்தித்தாலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சிறந்த வெற்றியை பதிவு செய்து சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ளது. இந்த சூழ்நிலையில் இந்திய பாகிஸ்தான் அணிகள் குறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் பசித் அலி சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இதை இப்போதே சொல்கிறேன்
இதுகுறித்து பசித் அலி விரிவாக கூறும்போது “இப்போது விஷயம் என்னவெனில் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்து ஒயிட் வாஷ் ஆனது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற போது மீண்டும் பார்முக்கு திரும்பி விட்டது என்று நினைத்தேன். ஆனால் விஷயம் தலைகீழாக மாறி இந்திய அணி 3-1 என்ற கணக்கில் மோசமான தோல்வியை சந்தித்தது.
இதையும் படிங்க:எங்க ஆட்டம் இனிமேல்தான் சூடு பிடிக்கும்.. அவர் திரும்ப வந்துட்டாரு.. ஒரு ரசிகனா இது மகிழ்ச்சி – டிம் சவுதி
எனவே நான் இந்த விஷயத்தை தெளிவாக சொல்கிறேன். இதை பின்னர் மீண்டும் சொல்ல முடியாமல் போகலாம். நான் முன்பே சொன்னது போல பாகிஸ்தான் அணி இந்தியாவை தோற்கடித்தால் அது வருத்தப்படக்கூடிய விஷயமாக இருக்கும். பாகிஸ்தான் அணி தற்போது சிறப்பாக உள்ளது” என்று பசித் அலி பேசி இருக்கிறார். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது ஒரு நாள் தொடரில் சிறந்த பார்மில் இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்திய அணி நிச்சயமாக பாகிஸ்தான் அணியை தோற்கடிக்கும் என இந்திய முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.






