இந்திய கிரிக்கெட்

80 சதவீத பாகிஸ்தான் மக்களே இப்படி சொல்வது.. என் வாழ்வில் முதன்முறை.. நம்பவே முடியல.. பாக் முன்னாள் வீரர் வியப்பு

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை நடைபெற உள்ள நிலையில் இதில் இந்திய அணியின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கும் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான பசித் அலி பாகிஸ்தான் மக்களின் கருத்துக்களை கேட்டறிந்ததாக சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

இந்தியா பாகிஸ்தான் போட்டி

இந்திய அணி கடந்த 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் விளையாடுவதை முற்றிலுமாக தவிர்த்ததால் இருநாட்டு ரசிகர்களுக்கு இது போன்ற ஐசிசி தொடர்களில் மட்டுமே இந்த இரண்டு அணிகளும் விளையாடுவதால் இதனை காண அதிக ஆர்வம் கொண்டிருக்கின்றனர். மேலும் தனிப்பட்ட ரீதியாக பாகிஸ்தான் அணி அண்டை நாடாக கருதப்படுவதால் இரு நாட்டு ரசிகர்களும் தங்கள் அணி ஜெயிக்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டு இருக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையே நாளை முக்கிய தொடரான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டி நடைபெற உள்ள நிலையில், பாகிஸ்தான் அணியின் செயல்பாடு இந்த தொடரில் சற்று ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருப்பதால் 80 சதவீத மக்கள் இந்த போட்டியில் இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என பாகிஸ்தான் ரசிகர்களே சொல்கிறார்கள் என அந்த நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பசித் அலி பரபரப்பான கருத்து ஒன்றை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

80 சதவீத மக்களின் கருத்து

இதுகுறித்து பசித் அலி கூறும் போது “நேற்று முதல் ஓட்டுநர்கள், காலை உணவு பரிமாறுபவர்கள், என் அம்மா, வீட்டு வேலைக்காரர்கள் என்று அனைவரையும் சந்தித்து பேசி விட்டேன். என் வாழ்க்கையிலேயே 80 சதவீத பாகிஸ்தான் மக்கள் முதல்முறையாக இந்திய அணி இந்தப் போட்டியில் எளிதாக வெற்றி பெறும் எனவும், மேலும் இந்த பாகிஸ்தான் அணியாள் இந்திய அணியை வீழ்த்த முடியாது எனவும் கூறுகிறார்கள். எனவே இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் அது ஒரு வருத்தமான நிகழ்வாக மாறும்.

இதையும் படிங்க:இது கம்பீரின் அணியா.? எதிரணியே அவர பார்த்து பயப்படுறப்போ.. பெஞ்சில் உட்காருவது நியாயமல்ல – இந்திய முன்னாள் வீரர்

அதாவது தொலைக்காட்சியில் உண்மையை பேச மக்கள் மிகவும் பயப்படுகிறார்கள்” என பசித் அலி பேசி இருக்கிறார். பாகிஸ்தான் அணி சொந்த நாட்டில் இதற்கு முன்னதாக நடைபெற்ற முத்தரப்பு தொடரில் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. அதற்குப் பிறகு தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதல் போட்டியிலேயே நியூசிலாந்து அணியிடம் பெரிய தோல்வி அடைந்ததால் மக்கள் இந்த அணி மீது அதிருப்தி கொண்டிருக்கிறார்கள் என தகவல்கள் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by

Recent Posts