ஐபிஎல் 2025

ஐபிஎல்-ல் 2 வெளிநாட்டு வீரர்கள்தான் பிளேயிங் லெவன்ல இருக்கணும்.. காரணம் பஞ்சாப்ப பாருங்க – பசித் அலி பேச்சு

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பசித் அலி ஒவ்வொரு ஐபிஎல் அணிகளின் பிளேயிங் லெவனிலும் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் இருந்தாலே போதும் என்றும், அதற்கான காரணம் குறித்தும் பேசியிருக்கிறார்.

- Advertisement -

தற்போது உலக கிரிக்கெட்டில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் நிறைய கிரிக்கெட் திறமைகள் உருவாகி வந்து கொண்டே இருக்கின்றன. மேலும் ஒவ்வொரு மாநிலத்தின் கிரிக்கெட் சங்கங்களும் தனிப்பட்ட முறையில் டி20 தொடரை நடத்த ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இங்கிருந்து சிறந்த இளம் கிரிக்கெட் திறமைகள் கிடைக்கின்றன.

ஆறு பந்துக்கு ஆறு சிக்ஸர்

இந்த நிலையில் நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் டெல்லி பிரிமியர் லீக்கில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர் அடித்த பிரியன்ஸ் ஆர்யா துவக்க வீரராக விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

மேலும் இந்த முறை மும்பை மாநில அணி சையத் முஸ்டாக் அலி கோப்பையை வெல்ல ஒரு காரணமாக இருந்த மிதவேக பந்துவீச்சு ஆல்ரவுண்டர் சூர்யன்ஷ் ஷெட்கே பிளேயிங் லெவனில் வாய்ப்பை பெற்றார். தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் இந்திய வீரர்கள் குழுவை பஞ்சாப் கிங்ஸ் அணியில் உருவாக்குவதற்கு முதல் போட்டியிலேயே திட்டத்தை ஆரம்பித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இரண்டு மூன்று வெளிநாட்டு வீரர்களே போதும்

இதுகுறித்து பேசி இருக்கும் பசித் அலி கூறும் பொழுது ” நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு துவக்க வீரராக வந்தவர் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர் அடித்தவர்தான். இந்த பிரியன்ஸ் ஆர்யாவின் பேட்டிங் டாப் கிளாஸ் ஆக இருக்கிறது. இந்தியாவில் இந்த அளவுக்கு பெரிய கிரிக்கெட் திறமைகள் வளர்ந்து வருகின்றன. எனவே ஐபிஎல் அணிகளின் பிளேயிங் லெவனில் நான்கு வெளிநாட்டு வீரர்களுக்கு பதிலாக மூன்று அல்லது இரண்டாக குறைத்து விடலாம். பஞ்சாப் அணியில் வெளிநாட்டு வீரர்கள் ஒன்றும் பெரிதாக சிறப்பாக செயல்படவில்லை”

இதையும் படிங்க : கம்பீர் நீங்க டிராவிட்ட பின்பற்ற மாட்டீங்களா.. உங்களுக்கு காசு தான் ரொம்ப முக்கியமா? – கவாஸ்கர் விமர்சனம்

“நான் தற்போது பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் நான்காவது அணியாக பஞ்சாப் கிங்ஸ் அணியை தேர்ந்தெடுக்கிறேன். அவர்களிடம் நல்ல வலுவான காம்பினேஷன் இருக்கிறது. கொல்கத்தா அணிக்கு கேப்டனாக இருந்ததைப் போலவே தற்போது பஞ்சாப் அணிக்கும் கேப்டனாக சிறப்பாக ஸ்ரேயாஸ் ஐயர் இருக்கிறார். அவர் கேப்டனாக முதல் போட்டியிலேயே தனது அணியை வெல்ல வைத்திருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts