18 பந்தில் 48 ரன்.. நான்கே ஓவரில் இலங்கையை வீழ்த்தி பங்களாதேஷை வெல்ல வைத்த இளம்வீரர்

0
550
Bangladesh

இலங்கை பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று தொடர் சமநிலையில் இருந்தது. மேலும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இலங்கை அணி கைப்பற்றி இருந்தது.

இந்தத் தொடர் பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்று வருகின்ற காரணத்தினால், பங்களாதேஷ் அணி தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இந்த நிலையில் இன்று தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர் பதும் நிசாங்கா 1, கேப்டன் குஷால் மெண்டிஸ் 29, அவிஸ்கா பெர்னாடோ 4, சதிர சமர விக்ரமா 14, சரித் அசலங்கா 37, துனித் வெல்லாலகே 1, ஹசரங்கா 11,தீக்ஷனா 15, பிரமோத் மதுசன் 3, லகிரு குமாரா 1 என சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.

இன்னொரு முனையில் பேட்டிங் வரிசையில் ஆறாவது இடத்தில் வந்த ஜனித் லியாங்கே கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 102 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 101 ரன்கள் குவித்தார். இலங்கையணி 50 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் எடுத்தது. பங்களாதேஷ் தரப்பில் டஸ்கி அகமது 3, முஸ்தஃபிசூர் மற்றும் மெகதி ஹசன் மிராஸ் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பங்களாதேஷ் அணியின் துவக்க ஆட்டக்காரர் அனாமுல் ஹக் 12 ரன்களில் வெளியேற, மற்றுமொரு துவக்க ஆட்டக்காரர் தன்ஷித் ஹசன் 81 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். இதற்கு நடுவில் கேப்டன் நஜீபுல் சாந்தோ 1, தவ்ஹீத் ஹ்ரிடாய் 22, முகமதுல்லா 1, மெகதி ஹசன் மிராஸ் 25 ரன்கள் என பங்களாதேஷ் அணி 178 ரன்னுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்தது.

- Advertisement -

இந்த நிலையில் மேற்கொண்டு பங்களாதேஷின் வெற்றிக்கு 56 ரன்கள் தேவைப்பட்டது. முக்கிய ஆறு விக்கெட்டுகளை இழந்த காரணத்தினால், இலங்கை அணிக்கு திடீரென வெற்றி வாய்ப்பு உருவானது. இந்த நேரத்தில் அனுபவ வீரர் முஷ்பிக்யூர் ரஹீம் உடன் இளம் வீரர் ரிசாத் ஹூசைன் ஜோடி சேர்ந்தார்.

இதையும் படிங்க : மும்பைக்கு கேப்டனான பிறகு ரோகித்கிட்ட பேசினிங்களா? – ஹர்திக் பாண்டியா தந்த பதில்

36.1 வது ஓவரில் ஆறாவது விக்கெட் விழுந்து இருக்க களம் இறங்கிய ரிசாத் ஹுசைன் 40.2 ஓவரில், மொத்தமாக நான்கே ஓவரில் போட்டியை முடித்துவிட்டார். வெறும் 18 பந்துகளை சந்தித்த அவர் ஆட்டம் இழக்காமல் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 48 ரன்கள் அடித்து மிரட்டினார். முஸ்பிக்யூர் ரஹீம் ஆட்டம் இழக்காமல் 36 பந்தில் 37 ரன்கள் எடுத்தார். முடிவில் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியை வென்று, பங்களாதேஷ் அணி 2-1 எனத் தொடரைக் கைப்பற்றி, டி20 தொடரை இழந்ததற்கு இலங்கை அணிக்கு பதிலடி கொடுத்திருக்கிறது.