வெஸ்ட் இண்டீஸ் பங்களாதேஷ் டெஸ்ட்.. இந்தியாவில் எந்த டிவியில் பார்க்கலாம்?.. போட்டி அட்டவணை முழு விவரம்

0
29
WI

பங்களாதேஷ் அணி மூன்று கோடி கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்கு வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்கிறது. இதை இந்தியா உட்பட நான்கு நாடுகளில் எந்த தொலைக்காட்சி மற்றும் ஆன்லைனில் பார்க்கலாம் என்ற விபரங்களை பார்ப்போம்.

தற்போது பங்களாதேஷ் அணி மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் அந்த அணி மூன்று வடிவ தொடர்களிலும் விளையாடுவதற்கு வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு இந்த மாதத்தில் சுற்றுப்பயணம் செய்கிறது. இதில் தற்போது அந்த அணி பயிற்சி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடிக் கொண்டு வருகிறது.

- Advertisement -

டெஸ்ட் தொடர் அட்டவணை

பங்களாதேஷ் அணியின் சுற்றுப்பயணத்தில் முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நடைபெறுகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாளை நவம்பர் 22 ஆம் தேதி நார்த் சவுண்டு ஆண்டிகுவா மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 30ஆம் தேதி கிங்ஸ்டன் ஜமைக்கா மைதானத்திலும் நடைபெறுகிறது.

இதற்கு அடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் என அடுத்து இரண்டு வெள்ளைப் பந்து தொடர்கள் இரண்டு அணிகளுக்கும் இடையே நடைபெற இருக்கிறது. பங்களாதேஷ் அணி மூன்றில் ஒரு தொடரையாவது வெல்ல வேண்டிய கட்டாய நிலையில் இருக்கிறது.

- Advertisement -

எந்த தொலைக்காட்சி மற்றும் ஆன்லைனில் பார்க்கலாம்

வெஸ்ட் இண்டீஸ் : இந்தத் தொடரை வெஸ்ட் இண்டீசில் இஎஸ்பிஎன் தொலைக்காட்சி இடம் மற்றும் டிஸ்னி பிளசில் ஆன்லைனிலும் பார்க்கலாம்.

பங்களாதேஷ் : பங்களாதேஷில் த டாஃபி டிஜிட்டல் பிளாட்பாரத்தில் பார்க்கலாம்.

இந்தியா : இந்தத் தொடர் இந்தியாவில் எந்த தொலைக்காட்சியிலும் எந்த பிரபல ஆன்லைனிலும் ஒளிபரப்பப்படவில்லை. ஆனால் டிஜிட்டலில் ஃபேன் கோடு அப்ளிகேஷனில் பார்க்கலாம்.

இதையும் படிங்க : கில் என்னுடைய இடத்தில் ஆடட்டும்.. ஆனா பேட்டிங்ல இந்த விஷயத்தை கட்டாயம் செய்யனும் – புஜாரா பேட்டி

யுனைடெட் கிங்டம் : இங்கு டிஎன்டி ஸ்போர்ட்ஸ் 2 தொலைக்காட்சியிலும், மேலும் டிஎன்டி ஆன்லைனிலும் பார்க்கலாம்.

- Advertisement -