வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு புதிய கேப்டன் தலைமையில் பங்களாதேஷ் அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது பங்களாதேஷ் அணி மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்கு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு ஒன்று என சமன் செய்த பங்களாதேஷ் அணி நேற்று ஒருநாள் கிரிக்கெட் தொடரை இழந்தது. அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடக்க இருக்கிறது.
புதிய கேப்டன் அறிவிப்பு
பங்களாதேஷ் அணியின் கேப்டன் நஜ்முல் சாந்தோ காயமடைந்த காரணத்தினால் ஒருநாள் தொடருக்கு மெகதி ஹசன் மிராஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் டி20 தொடருக்கும் அவர் திரும்பாத நிலையில் திடீரென இன்னொரு புதிய கேப்டனாக லிட்டன் தாஸ் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
மேலும் இந்த அணியில் ஷாகிப் அல் ஹசன், தவ்ஹீத் ஹரிடாய், முஸ்தஃபிசூர் ரஹ்மான், சோரிஃபுல் இஸ்லாம் மற்றும் ரகிபுல் ஹசன் போன்ற முன்னணி வீரர்களும் இடம் பெறவில்லை. ரிப்பன் மென்டோல் என்ற புதிய வீரருக்கு பங்களாதேஷ் அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
திரும்பி வரும் நான்கு வீரர்கள்
இந்த நிலையில் சௌமியா சர்க்கார், அஃபிப் ஹொசைன், நசும் அகமது மற்றும் சமீம் ஹொசைன் ஆகிய பழைய வீரர்கள் நால்வர் திரும்பி வருகிறார்கள். சமீப காலமாக பங்களாதேஷ் அணி மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் பெரிய தோல்விகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது. உள்நாட்டில் சிறப்பான அணியாக இருந்ததையும் தவறவிட்டிருக்கிறது.
மிகக்குறிப்பாக பங்களாதேஷ் அணி மாறிவரும் டி20 கிரிக்கெட்டில் 180 முதல் 200 ரன்கள் அடிப்பதற்கான அணியாக இல்லை. இந்திய சுற்றுப்பயணத்தின் போது பங்களாதேஷ் கேப்டன் இதை வெளிப்படையாகவே பேசி இருந்தார். தற்பொழுது டி20 கிரிக்கெட்டுக்கு அதிரடியான அணியை அமைக்க திட்டமிட்டு இப்படியான நடவடிக்கையில் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் இறங்கியிருக்கிறது.
இதையும் படிங்க : வேற வழி இல்லை.. நித்திஷ் ரெட்டியை தூக்குனாதான் இந்தியா ஜெயிக்க முடியும்.. காரணம் இதுதான் – சஞ்சய் மஞ்சுரேக்கர் கருத்து
பங்களாதேஷ் டி20 அணி : லிட்டன் தாஸ் (கேப்டன்), சௌமியா சர்க்கார், தன்சித் ஹசன் தமீம், பர்வேஸ் ஹொசைன் எமன், அஃபிஃப் ஹொசைன், மெஹிதி ஹசன் மிராஸ், ஜேக்கர் அலி அனிக், ஷமிம் ஹொசைன் பட்வாரி, ஷேக் மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், நசும் அஹ்மத், தஸ்கின் அகமத், ஹஸன் மஹ்மூத், ரிப்பன் மொண்டோல் மற்றும் தன்சீம் ஹசன் ஷாகிப்.