ஒரே நாளில் 17 விக்கெட்.. ஆச்சரியமான டிக்ளர்.. வெஸ்ட் இண்டீஸ் பங்களாதேஷ் டெஸ்ட் சுவாரசிய கட்டம்

0
406
WI

வெஸ்ட் இண்டீஸ் பங்களாதேஷ் அணிகள் மோதிக் கொள்ளும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் ஒரே நாளில் 17 விக்கெட் விழுந்து இருக்கிறது. தற்போது இந்த போட்டியில் முடிவை நோக்கி பரபரப்பான முறையில் சென்று கொண்டிருக்கிறது.

பங்களாதேஷ் அணி மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்கு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியை ஆண்டிக்குவா நார்த் சவுண்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் கலக்கல்

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பங்களாதேஷ் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஜஸ்டின் கிரீவ்ஸ் 115, மிக்கேல் லூயிஸ் 97 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி முதல் இன்னிங்ஸில் 450 ரன்கள் குவித்தது. ஹசன் மக்மத் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து விளையாடிய பங்களாதேஷ அணி 9 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்திருந்தபோது ஆச்சரியப்படும் விதமாக இன்னிங்ஸை டிக்ளர் செய்தது. அந்த அணிக்கு ஜாகிர் அலி 53, மொமினுல் ஹக் 50 ரன்கள் எடுத்தார்கள். அல்ஜாரி ஜோசப் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

எதிர்பாராமல் சரிந்த வெஸ்ட் இண்டீஸ்

இதைத்தொடர்ந்து நான்காவது நாள் விளையாட ஆரம்பித்த வெஸ்ட் இண்டீஸ் அணி 46.1 ஓவரில் 152 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணிக்கு அதிகபட்சமாக அலிக் ஆதனஸ் 63 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். அபாரமாக பந்து வீசிய டஸ்கின் அகமத் ஆறு விக்கெட் கைப்பற்றினார்.

இதையும் படிங்க : ரோகித்திடம் நான் சொல்ல மாட்டேன்.. இனி இந்த வாய்ப்பு எனக்குதான் – தற்காலிக கேப்டன் பும்ரா பேட்டி

இதைத்தொடர்ந்து பங்களாதேஷ் அணிக்கு துரத்தக்கூடிய வகையில் 334 ரன்கள் இலக்கு அமைந்தது. ஆனால் திடீரென போட்டிக்குள் வந்த பங்களாதேஷ் அணி இரண்டாவது இன்னிங்சில் சொதப்பி இந்த வாய்ப்பை இழந்திருக்கிறது. நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் பங்களாதேஷ் அணி 31 ஓவர்களில் 109 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட்டுகளை இழந்து இருக்கிறது. அந்த அணியின் வெற்றிக்கு மூன்று விக்கெட்டுகள் கைவசம் இருக்க 225 ரன்கள் தேவைப்படுகிறது. எனவே முதல் டெஸ்டில் பங்களாதேஷ் அணி தோல்வி அடைவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது!

- Advertisement -