இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த சூழ்நிலையில் அடுத்த டெஸ்ட் போட்டிக்கு ரோஹித் சர்மா திரும்பவும் கேப்டனாக பொறுப்பேற்க உள்ள நிலையில் முந்தைய கேப்டன் பும்ரா இது குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
கேப்டன் பதவியை விட்டு விலகும் பும்ரா
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் பெர்த்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி சிறப்பாக செயல்பட்டு 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கேப்டனாக தலைமை தாங்கினார்.
இரண்டாவது குழந்தை ரோகித் சர்மாவுக்கு பிறந்த நிலையில் அவர் முதலாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு வந்தடைந்துள்ளார். எனவே இனி நான்கு போட்டிகளிலும் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்று தகவல் வெளிவந்துள்ளது. இந்த சூழ்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டனாக பதவி வகித்த பும்ரா நான் கேப்டன் பதவியை விட்டு வெளியேற போகிறேன் என்று ரோகித்திடம் சொல்ல போவதில்லை என்று நகைச்சுவையாக சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ரோஹித் சர்மாவிடம் நான் சொல்லப்போவதில்லை
இதுகுறித்து அவர் கூறும் போது “நான் கேப்டன் பதவியை விட்டு வெளியேறப் போகிறேன் என்று ரோஹித் சர்மாவிடம் சொல்லப்போவதில்லை (நகைச்சுவையாக ). இதற்கு முன்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலும் அவர் ஒரு சிறந்த கேப்டன் மற்றும் அவரது வேலையை சிறப்பாக செய்திருக்கிறார் என்று கூறி இருக்கிறேன். தற்போது அவருக்காக அவரது இடத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறேன். இது குறித்து நானும் அவரும் இந்தியாவில் விவாதித்து பேசியிருக்கிறோம்.
இதையும் படிங்க:அடிச்சு சொல்றேன்.. ஸ்ரேயாஸ் பஞ்சாப் அணிக்கு இத செஞ்சா.. இந்த பெரிய பொறுப்பு இவருக்குதான் – உத்தப்பா பேட்டி
எனவே இப்போது அவர் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு என்னால் முடிந்த அளவு அவருக்கு உதவி செய்யப் போகிறேன்” என்று பும்ரா கூறியிருக்கிறார். சொந்த மண்ணில் இந்திய அணிக்கு எதிராக முதலாவது போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் ஆஸ்திரேலியா அணி அடுத்து வரும் பகலிறவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. எனவே இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.






