வீடியோ: விராட் கோலி செஞ்ச இந்த காரியத்துக்கு எங்களுக்கு 5 ரன் வேணும் – புலம்பிய பங்களாதேஷ் கீப்பர்!

0
8709

கோஹ்லி செஞ்சது விதிமுறை மீறல், 5 ரன் வேணும் என்று புலம்பியுள்ளார் வங்கதேச விக்கட் கீப்பர்.

அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றின் மற்றொரு போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின. மிக முக்கியமான ஆட்டம் என்பதால், மழையை பொருட்படுத்தாமல் மைதானத்தில் கூட்டம் வழிந்தது. இந்த ஆட்டத்தில் வெல்லும் அணிக்கு அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பு பிரகாசமாகும் என்பதாலும் பரபரப்பு உச்சத்தில் இருந்தது.

- Advertisement -

இந்த போட்டியில் டாசை இழந்து முதலில் பேட் செய்த இந்திய அணி கேஎல் ராகுல்(51) மற்றும் விராட் கோலி(64*) ஆகியோரது அரை சதங்களால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 184 ரன்கள் எடுத்தது.

இதற்கடுத்து களமிறங்கிய பங்களாதேஷ் அணியின் துவக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ், பவர்-பிளே ஓவரில் இந்திய பந்துவீச்சாளர்களை கதிகலங்க செய்தார். வேறும் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக விளாசி 21 பந்துகளில் 50 ரன்கள் விளாசி இந்திய அணிக்கு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கினார்.

- Advertisement -

பங்களாதேஷ் அணி ஏழு ஓவர்களுக்கு 66 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை வந்து ஆட்டம் தடைபட்டது. இதற்குப் பிறகு ஆட்டம் துவங்கிய நிலையில், டக்-வோர்த் லூயிஸ் முறைப்படி பங்களாதேஷ் அணிக்கு 16 ஓவர்களில் 151 ரன்கள் இலக்காக வைக்கப்பட்டது. பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் 16வது ஓவரில் வங்கதேச அணிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. அதனை கட்டுப்படுத்தி 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

ஆட்டத்தின் ஏழாவது ஓவரின் போது பந்து பவுண்டரி திசை நோக்கி சென்றது. அதை அர்சதீப் சிங் தூக்கி எறிந்தார். அப்போது இரண்டு ரன்கள் ஓடிக்கொண்டிருந்த வங்கதேச வீரர்களை ஒரு ரன்னாக மாற்ற, விராட் கோலி பந்தை கையில் பிடித்தது போலவும் அதை ஸ்டம்பை நோக்கி எறிவது போலவும் போலியாக பாவனை செய்தார்.

இதை பிடித்துக் கொண்ட வங்கதேச வீரர்கள், இது பேட்ஸ்மேன்களை திசைதிருப்பும் வேலை. இடையூறு செய்யும் விதிமுறையின் படி இதற்கு ஐந்து ரன்கள் கொடுத்தாக வேண்டும் என நடுவரிடம் வாக்குவாதம் செய்தனர். ஆனால் விராட் கோலி தவறுதலாக எதுவும் செய்யவில்லை என்று நடுவர் தீர்ப்பு கொடுத்தார். இதைப் பிடித்துக் கொண்டு ஐந்து ரன்கள் கொடுத்திருக்க வேண்டும் என்று புலம்பி இருக்கிறார் வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர்.

வங்கதேச விக்கெட் கீப்பர் நூருல் ஹாசன் கூறுகையில், “நாங்கள் நன்றாக விளையாடிக் கொண்டிருந்தோம். விராட் கோலி செய்த இந்த செயல் நிச்சயம் எங்களை இடையூறு செய்ததாக இருந்தது. ஐசிசி விதிமுறைப்படி இதற்கு அபராதமாக ஐந்து ரன்கள் எங்களுக்கு கிடைத்திருக்க வேண்டும். அந்த வகையில் அநீதி நடந்திருக்கிறது. தற்போது ஐந்து ரன்கள் எவ்வளவு பெரிய மாற்றத்தை உண்டு செய்திருக்கும் என்று நம்மால் பார்க்க முடிகிறது. நடுவர்களும் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டதாக நான் பார்க்கிறேன்.” என்று புலம்பியுள்ளார்

- Advertisement -