ஆசிய கோப்பை 2022 – வங்கதேச அணி பயிற்சியாளர் விடுவிப்பு.. தமிழருக்கு புதிய பொறுப்பு

0
53

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 27ஆம் தேதி துபாயில் தொடங்குகிறது.இந்த நிலையில் வங்கதேச கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரசில் டொமிங்கோ டி20க்கு அணியை வழிநடத்தும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் உலகில் வளர்ந்து வரும் அணியாக கருதப்படும் வங்கதேசம் சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரை தோல்வியை தழுவி பரிதாபமான நிலைக்குச் சென்றது.

- Advertisement -

ஜிம்பாப்வே விடம் அடைந்த தோல்வி வங்கதேச கிரிக்கெட்டில் புதிய புயலை கிளப்பி இருக்கிறது. இதனை அடுத்து ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு புதிய கேப்டனாக சாகிபுல் ஹசன் நியமிக்கப்பட்டார். ஆசிய கோப்பை தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அணியின் பயிற்சியாளர் ஆன தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ரசில் டொமிங்கோவை வங்கதேச கிரிக்கெட் வாரியம் விடுவித்துள்ளது.

எனினும் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிக்கு ரசூல் டோமிங்கோ பயிற்சியாளராக செயல்படுவார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. 47 வயதான ரசில் டொமிங்கோ கடந்த 2019 ஆம் ஆண்டு வங்கதேச கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பணியில் சேர்ந்தார். தற்போது அவருடைய பணிக்காலம் நவம்பர் மாதம் 2023 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டொமிங்கோ வழிகாட்டுதலில் வங்கதேச அணி இதுவரை 15 டி20 போட்டிகளில் விளையாடி 13 போட்டிகளில் தோல்வியை தழுவி வெறும் இரண்டு ஆட்டங்களில் மட்டும் தான் வெற்றி பெற்றுள்ளது.

மேலும் கடந்த டி20 உலக கோப்பை போட்டியில் சூப்பர் 12 சுற்றில் வங்கதேச அணி ஒரு வெற்றியை கூட பெறவில்லை. இதனால் இந்த அதிரடி மாற்றம் நிகழ்த்தப்பட்டுள்ளது. டொமிங்கோவுக்கு பதிலாக தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீதர் வங்கதேச அணிக்கு வழிகாட்டியாக செயல்படுவார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வரையும் அறிவித்துள்ளது. வங்கதேச கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு ரசூல் டொமிங்கோ வரவேற்பு தெரிவித்துள்ளார். டி20 லிருந்து விடுவிக்கப்பட்டதன் மூலம் தாம் இனி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டியில் கவனம் செலுத்த ஏதுவாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -