உலக கிரிக்கெட்

484-9.. கில்கிறிஸ்டின் 17 ஆண்டு சாதனையை உடைத்த ரஹீம்.. இலங்கை அணி பரிதாபம்.. பங்களாதேஷ் அபாரம்

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி பெரிய அளவில் ரன்கள் குவித்து அசத்தியிருக்கிறது. இதில் முஷ்பிக்யூர் ரஹீம் ஆஸ்திரேலியாவின் ஆடம் கில் கிறிஸ்டின் 17 ஆண்டுகால உலக சாதனையை உடைத்திருக்கிறார்.

- Advertisement -

தற்போது இலங்கைக்கு மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்கு பங்களாதேஷ் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட கஷ்டத்து தொடரின் முதல் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது.

அதிரடி காட்டிய பங்களாதேஷ்

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணிக்கு கேப்டன் நஜ்புல் சாந்தோ மற்றும் அனுபவ வீரர் முஸ்க்பிக்யூர் ரஹீம் இருவரும் ஆட்டம் இழக்காமல் அபார சதம் அடிக்க முதல் நாள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்தது.

இதைத்தொடர்ந்து இன்று இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் பங்களாதேஷ் அணி மழையின் குறுக்கீட்டில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 484 ரன்கள் எடுத்திருக்கிறது. அதிகபட்சமாக நஜ்புல் சாந்தோம் 148 ரன்கள், லிட்டன் தாஸ் 90 ரன்கள், முஸ்பிக்யூர் ரஹீம் 350 பந்தில் 163 ரன்கள் எடுத்திருக்கிறார்கள். இலங்கை பந்துவீச்சில் அசிதா பெர்னாடோ, மிலன் ரத்னாயகே, தரிந்து ரத்னாயகே மூவரும் தலா மூன்று விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்கள்.

- Advertisement -

ரஹீம் உலக சாதனை

பங்களாதேஷ் அணிக்கு நீண்ட காலமாக விளையாடி வரும் அனுபவ வீரர் முஸ்பிகியூர் ரஹீம் சர்வதேச கிரிக்கெட்டில் பங்களாதேஷ் 15000 ரன்கள் கடந்தார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு பந்து கூட வீசாமல் விக்கெட் கீப்பராக அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேனாக ஆடம் கில்கிறிஸ்டின் 17 ஆண்டுகால உலக சாதனையை முஸ்பிக்யூர் ரஹீம் உடைத்திருக்கிறார்.

இதையும் படிங்க : ரோகித்துக்கு விளையாட்டு வீரருக்கான தகுதி இல்லை.. கோலியை போல் ரசிகர்கள் மிஸ் செய்ய மாட்டாங்க.. முன்னாள் இங்கிலாந்து வீரர் விமர்சனம்

முஷ்ஃபிகுர் ரஹீம் – 15,502 – பங்களாதேஷ்
ஆடம் கில்கிறிஸ்ட் – 15,461 – ஆஸ்திரேலியா
குயின்டன் டி காக் – 12,654 – தென்னாப்பிரிக்கா
ஜோஸ் பட்லர் – 11,881 – இங்கிலாந்து
ஜானி பேர்ஸ்டோவ் – 11,581 – இங்கிலாந்து

- Advertisement -
Published by