ரோகித்துக்கு விளையாட்டு வீரருக்கான தகுதி இல்லை.. கோலியை போல் ரசிகர்கள் மிஸ் செய்ய மாட்டாங்க.. முன்னாள் இங்கிலாந்து வீரர் விமர்சனம்

0
157

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவை கோலி அளவுக்கு யாரும் மிஸ் செய்ய மாட்டார்கள் என்று முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜெஃப்ரி பாய்காட் தெரிவித்துள்ளார். இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

இது குறித்து பேசிய அவர், “விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் ஓய்வு, இந்தியா இங்கிலாந்தை வீழ்த்தும் வாய்ப்புகளை பாதிக்கிறது. கோலி ஓய்வு பெற்றது மிகப்பெரிய இழப்பு. ஏனெனில் அவர் மூன்று வடிவங்களிலும் இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேனும், தலைசிறந்த வீரருமாக இருந்தார்.”

- Advertisement -

இந்தியாவுக்கு வாய்ப்பு குறைவு:

“இந்தியா அதிக சர்வதேச கிரிக்கெட் ஆடுவதால், ஓய்வு குறைவாக இருப்பது மனதை சோர்வடையச் செய்கிறது. எவ்வளவு திறமை அல்லது அனுபவம் இருந்தாலும், மனதளவில் புத்துணர்ச்சியாகவும் சவாலுக்கு தயாராகவும் இல்லாவிட்டால், அது சோர்வை ஏற்படுத்தும். ரோஹித் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தார்.”

“தனது உச்சத்தில், அழகான ஸ்ட்ரோக் பிளேயராக இருந்தார். ஆனால் கோலியைப் போல அவர் அதிகம் ரசிகர்களால் மிஸ் பண்ண மாட்டார், ஏனெனில் அவரது டெஸ்ட் பதிவு சிறப்பாக இருந்தாலும், அது அசாதாரணமானதாக இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில், அவரது பேட்டிங் சற்று பின்னடைவை சந்தித்து இருந்தது.”

- Advertisement -

கோலியை போல் கிடையாது:

“ரோஹித் ஒருபோதும் கோலியைப் போல விளையாட்டு வீரருக்கான உடல்தகுதி இல்லை.இங்கிலாந்தில் தொடக்க ஆட்டக்காரராக ஆடுவது மிகவும் கடினம் என்பதை அவர் அறிவார். ஏனெனில் புதிய பந்து அதிகம் நகரும். வெற்றிக்கு எந்தவொரு வாய்ப்பையும் பெற, நீங்கள் உண்மையில் சவாலுக்கு தயாராக இருக்க வேண்டும்.”

இதையும் படிங்க: தாயா? நாடா? பயிற்சியாளர் கம்பீர் எடுத்த முக்கிய முடிவு.. இந்திய அணியில் நிகழ்ந்த மாற்றம்

“காலப்போக்கில், தொடக்க ஆட்டக்காரராகவும், மூன்று வடிவங்களிலும் கேப்டனாகவும் இருந்த களைப்பு அவரை பாதித்தது என்று நினைக்கிறேன்” என்று பாய்காட் கூறியுன்ளளார். 2011-க்குப் பிறகு முதல் முறையாக, இந்தியா விராட் இல்லாமல் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர் ஆடவுள்ளது. கடைசியாக 2021-ல் இந்தியா இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, ரோஹித் இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தார்.
ஓவலில் சதம் அடித்து, லார்ட்ஸ் டெஸ்டில் சிறப்பாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -