42 ஓவர் 6 விக்கெட்.. நஜிபுல்-ரஹீம் மெகா பார்ட்னர்ஷிப்.. இலங்கைக்கு பங்களாதேஷ் அணி பதிலடி தந்தது

0
275
Bangladesh

பங்களாதேஷ் சென்றுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இரண்டுக்கு ஒன்று என கைப்பற்றியது. தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வது என முடிவு செய்தது.

இலங்கை அணிக்கு பேட்டிங்கில் துவக்க ஆட்டக்காரர்கள் பதும் நிஷாங்கா 36, அவிஷ்கா பெர்னாடோ 33 ரன்கள் எடுத்து ஓரளவுக்கு நல்ல துவக்கம் தந்தார்கள். இதற்கடுத்து பேட்டிங் வரிசையில் மூன்றாவதாக வந்த கேப்டன் குசால் மெண்டிஸ் 59 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து வந்த அனுபவ வீரர்கள் சரித் அசலங்கா 18, சதிர சமரவிக்ரம 3 இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறிய காரணத்தினால், இலங்கை அணியின் மிடில் ஆர்டர் ஒடிந்தது. இதன் காரணமாக அந்த அணியால் பெரிய ஸ்கோரை நோக்கி செல்ல முடியவில்லை.

இவர்களுக்குப் பிறகு இளம் வீரர் ஜனித் லியாங்கே மட்டும் தாக்குப்பிடித்து 69 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். இலங்கையணி 48.5 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்கள் மட்டுமே எடுத்தது. பங்களாதேஷ் தரப்பில் சோரிஃபுல் இஸ்லாம், டஸ்கின் அகமத் மற்றும் தன்சின் ஹ்சன் சாகிப் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து பேட்டிங்கை துவங்கிய பங்களாதேஷ் அணிக்கு அடுத்தடுத்து லிட்டன் தாஸ் 0, சவுமியா சர்க்கார் 3, தவ்ஹீத் ஹ்ரிடாய் 3, முகமதுல்லா 37 என நான்கு முக்கிய விக்கெட்டுகள் சரிந்தது. இந்த நிலையில் ஜோடி சேர்ந்த கேப்டன் நஜீபுல் சாந்தோ மற்றும் அனுபவ வீரர் முஸ்பிகியூர் ரஹீம் இருவரும் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பங்களாதேஷ் அணியை மெல்ல மெல்ல கரையேற்றினார்கள்.

- Advertisement -

மிகச் சிறப்பாக விளையாடிய இருவரும் அரை சதங்கள் கடந்தார்கள். மேலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கேப்டன் நஜீபுல் சாந்தோ அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இந்த ஜோடி 175 பந்துகளில் 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் பங்களாதேஷ் வெற்றியை உறுதி செய்தது. 42.3 ஓவர்களில் இலக்கை எட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: நியூசி பாக் டி20 தொடர் அட்டவணை வெளியீடு.. ஐபிஎல் 2024-ல் நியூசிலாந்து வீரர்கள் ஆடுவார்களா.?

இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்ற முஸ்பிகியூர் ரஹீம் 84 பந்துகளில் 8 பவுண்டரிகள் உடன் 73 ரன்கள், கேப்டன் நஜிபுல் சாந்தோ 129 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 122 ரன்கள் எடுத்தார்கள். டி20 தொடரில் உள்நாட்டில் ஏற்பட்ட தோல்விக்கு, ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு பங்களாதேஷ் அணி பதிலடி கொடுத்திருக்கிறது.