இன்று இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் விக்கெட்டை போட்டியின் முதல் பந்திலேயே வீழ்த்தியது குறித்து மிட்சல் ஸ்டார்க் பேசியிருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று அடிலைட் ஓவல் மைதானத்தில் ஆரம்பித்தது. இந்த போட்டியில் மிட்சல் ஸ்டார்க் அதிரடி பந்துவீச்சால் இந்திய அணி 180 ரன்னில் சிறந்தது.
ஜெய்ஸ்வால்-ஸ்டார்க் தனி போட்டி
ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்டார்க் இடையே பேட் மற்றும் பந்துக்கு தனியாக ஒரு போட்டி முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து சென்று கொண்டிருக்கிறது. ஸ்டார்க் வீசிய பந்து மிகவும் மெதுவாக வருகிறது என ஜெய்ஸ்வால் அவரை கொஞ்சம் வம்புக்கு இழுத்து வைத்திருந்தார். இது அதிரடி பந்துவீச்சாளரான அவருக்கு கொஞ்சம் பின்னடைவாகவே அமைந்திருந்தது.
இப்படியான நிலையில் இன்று போட்டி துவங்கிய முதல் பந்திலேயே கடந்த இன்னிங்ஸில் 161 ரன்கள் குவித்திருந்த ஜெய்ஸ்வாலை அபாரமான ஸ்விங் மூலம் எல்பிடபிள்யூ செய்து வெளியேற்றினார். இது ஜெய்ஸ்வால் பேச்சுக்கு சரியான பதிலடியாக அமைந்தது. தற்போது இருவருக்கும் இடையே நடைபெறும் இந்த போட்டியில் இறுதியாக இப்போதைக்கு ஸ்டார்க் வென்று இருக்கிறார் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
அந்தப் பந்துக்கு முன்பு இதுதான் நடந்தது
இந்த நிலையில் ஜெய்ஸ்வால் விக்கெட் குறித்து மிகவும் நேர்மையாக பேசி இருக்கும் ஸ்டார்க் கூறும் பொழுது “உண்மையில் நான் அப்படி ஒரு பந்தை வீச வேண்டும் என கற்பனை செய்யவில்லை. நான் அந்த பந்தை வீசினேன் அது அப்படியாக ஸ்விங் ஆகியது. இதுதான் அந்த நேரத்தில் நேர்மையாக நடந்தது. நான் எதையும் திட்டமிட்டு செய்யவில்லை”
இதையும் படிங்க : 13 வயது சூரியவன்சி.. 36 பந்தில் ருத்ர தாண்டவம்.. இந்திய அணி U19 பைனல்.. இலங்கை அணியை வீழ்த்தியது
“இந்த போட்டியில் ஆடுகளம் கொஞ்சம் புல் உடன் காணப்பட்டது. மேலும் அதிலிருந்து கொஞ்சம் எங்களுக்கு உதவிகள் கிடைத்தது. மேலும் கண்டிஷன் பந்து ஸ்விங் ஆவதற்கு இருந்தது. இதன் காரணமாக நாங்கள் முதல் ஒரு மணி நேரத்தில் எதிர்பார்த்த உதவி அதற்குப் பிறகும் கூட பந்தை வைடாக வீசிய பொழுதும் கிடைத்தது” என்று கூறியிருக்கிறார்.






