டி20 உலகக் கோப்பை 2024

5 ஓவர்கள் 23 ரன்கள்.. கையிலிருந்த போட்டியை தோற்ற நெதர்லாந்து.. பங்களாதேஷ் இந்தியா குரூப்பில் வர அதிக வாய்ப்பு

இன்று டி20 உலகக்கோப்பை தொடரில் மிக முக்கியமான போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் கிங்ஸ்டன் மைதானத்தில் பங்களாதேஷ் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் கடைசி ஐந்து ஓவர்களில் சொதப்பி நெதர்லாந்து அணி கையில் இருந்த ஆட்டத்தை தோற்றது. பங்களாதேஷில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பத்து வருடங்கள் கழித்து இந்தப் போட்டி குறிப்பிட்ட மைதானத்தில் நடைபெற்றாலும் கூட ஆடுகளம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என சமமான ஒத்துழைப்பைக் கொடுத்தது.

பங்களாதேஷ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் தன்ஷித் ஹசன் 26 பந்தில் 35 ரன்கள் எடுத்தார். இறுதிக்கட்டத்தில் அனுபவ வீரர் மகமதுல்லா 21 பந்தில் 25 ரன்கள் எடுத்தார். ஆனால் ஒரு முனையில் நிலைத்து நின்ற ஷாகிப் அல் ஹசன் 46 பந்துகளில் 9 பவுண்டரிகள் உடன் 64 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் நின்றார். அவருக்கு டி20 உலகக்கோப்பையில் இதுவே முதல் அரைசதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாக பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து தரப்பில் ஆரியன் தத் மற்றும் வான் மீக்கரன் இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள். இதற்கு அடுத்து இந்த போட்டியை வென்றால்தான் அடுத்த சுற்று வாய்பில் நீடிக்க முடியும் என்ற நிலைமையில் நெதர்லாந்து களமிறங்கியது.

- Advertisement -

நெதர்லாந்து அணிக்கு மைக்கேல் லெவிட் 18, மேக்ஸ் ஓ டொனால்ட் 12, விக்ரம்ஜித் சிங் 26, ஏங்கெல்பிரிக்ட் 33,பாஸ் டி லீட் 0 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். நெதர்லாந்து அணி 15 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் கடைசியில் அந்த அணிக்கு ஐந்து ஓவர்களில் வெற்றிக்கு 49 ரன்கள் தேவைப்பட்டது.

இதையும் படிங்க : அர்ஸ்தீப் சிங்கால் இந்த வீரருக்கு பிரச்சனை.. இனி அவருக்கு வாய்ப்பே கஷ்டம் – அனில் கும்பளே கருத்து

இந்த நிலையில் அடுத்த ஐந்து ஓவர்களில் நெதர்லாந்து அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 23 ரன்கள் மட்டும் எடுத்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பங்களாதேஷ் அணிக்கு இது இரண்டாவது வெற்றி. மேலும் கடைசி போட்டியில் நேபாள் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. நெதர்லாந்து அணியை விட நல்ல ரன் ரேட் இருப்பதால், சூப்பர் 8 சுற்றுக்கு பங்களாதேஷ் அணி முன்னேறி, இந்திய அணியின் குழுவில் இடம்பெறுவது ஏறக்குறைய உறுதியாகி இருக்கிறது.

- Advertisement -
Published by

Recent Posts