நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் சிங் சிறப்பான முறையில் செயல்பட்டு கொண்டு வருகிறார். இதன் காரணமாக அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கொடுக்க வேண்டும் என கவாஸ்கர் பேசி இருந்தார். இந்த நிலையில் இவர் குறித்து அனில் கும்ப்ளே நடப்பு டி20 உலக கோப்பையில் என்ன நடக்கலாம்? என்று பேசி இருக்கிறார்.
இந்த முறை டி20 உலக கோப்பைக்கு இந்திய அணியில் மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார்கள். இதற்கு மாற்றாக நான்கு சுழல் பந்துவீச்சாளர்கள் அணிக்குள் கொண்டுவரப்பட்டார்கள். இது அப்போது பெரிய அளவில் பலராலும் விமர்சனத்திற்கு உள்ளானது. ரிங்கு சிங் இதன் காரணமாகவே அணியில் இடம் பெறவில்லை.
மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று வேகப் பந்துவீச்சாளர்களில் பும்ரா முதல் பந்துவீச்சாளராக இருந்தார். ஆனால் இரண்டாவது வேகப்பந்துவீச்சாளர் என்கின்ற இடம் அர்ஸ்தீப் சிங் மற்றும் சிராஜ் இருவரில் யாருக்கும் தரப்படவில்லை. தொடர்ந்து யார் அணியில் இடம் பெறுவார்கள் என்பதும் சந்தேகமாகவே இருந்து வந்தது.
இந்த நிலையில் மேற்கொண்டு டி20 உலகக் கோப்பை தொடர் முழுவதும் விளையாட இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் செல்கிறது. இதில் ஒரு மாற்றமாக பிளேயிங் லெவனில் ஒரு வேகப்பந்துவீச்சாளரை குறைத்து குல்தீப் யாதவ் கொண்டுவரப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. எனவே வெஸ்ட் இண்டீஸில் கழட்டி விடப்பட போகும் வேகப்பந்துவீச்சாளர் யார் என்பதில் தற்போது ஒரு முடிவு எட்டப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
இது குறித்து அனில் கும்ப்ளே கூறும் பொழுது “அர்ஸ்தீப் பாகிஸ்தானுக்கு எதிராக கடைசி ஓவரை வீசிய விதம் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அவர் எல்லாப் பகுதிகளிலும் பந்து வீசும் விதம், முகமது சிராஜை விட அவரையே தேர்வில் முன்னிலைப் படுத்துகிறது என்று நான் நினைக்கிறேன்.
இதையும் படிங்க : அடப்பாவமே.. பாகிஸ்தானுக்கு அடுத்த சுற்று சந்தேகம்.. புதிதாய் முளைத்த இரட்டை தலைவலி.. கதை முடிந்ததா?
எனவே இந்திய அணி நிர்வாகம் மேற்கொண்டு இருக்கும் போட்டிகளுக்கு இரண்டாவது வேகப்பந்து வீச்சாளராக அர்ஸ்தீப் சிங்கையே தங்களது விருப்பமான தேர்வாக நினைக்கும் என்று கருதுகிறேன். பும்ரா, அர்ஸ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா என மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் உடன் செல்லலாம். மேலும் அர்ஸ்தீப் சிங் இடதுகை பந்துவீச்சாளர் என்கின்ற வகையையும் தருகிறார்” என்று கூறியிருக்கிறார்.