100 கிலோ பெருசா 65 பெருசா.. இந்திய அணி ரொம்ப ஸ்ட்ராங்.. எங்களால அசைக்க முடியல – வங்கதேச கோச் பேட்டி

0
4809

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. இந்திய அணி ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை முழுவதுமாக கைப்பற்றும் நோக்கில் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் வங்கதேச அணியின் உதவி பயிற்சியாளர் நிக் போத்தாஸ் தங்களது அணியின் செயல் திறன் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

வங்கதேச தோல்விக்கு முக்கிய காரணம்

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் விளையாடி வரும் சூழ்நிலையில் ஏற்கனவே இந்திய அணி ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த சூழ்நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றியுள்ள நிலையில் கடைசி சம்பிரதாயமான போட்டி இன்று இரவு நடைபெற உள்ளது.

இந்த இரண்டு போட்டிகளிலும் சேர்த்து இந்திய கிரிக்கெட் அணி 22 சிக்ஸர்கள் அடித்துள்ள நிலையில் வங்கதேச அணி எட்டு சிக்ஸர்கள் மட்டுமே அடித்திருப்பது தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. எனவே வங்கதேச அணியில் சிக்ஸர்கள் அடிக்கும் வலிமையான வீரர்கள் இல்லை என்பதை ஒப்புக்கொண்ட உதவி பயிற்சியாளர் நிக் போத்தாஸ் தற்போது அதற்கு வேலை செய்து வருவதாக சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியில் வலிமையான வீரர்கள் அதிகம்

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்திய அணியில் மிகவும் வலிமையான வீரர்கள் இருக்கிறார்கள். நாங்கள் எங்களது வலிமை மற்றும் கண்டிஷனில் தொடர்ந்து வேலை செய்து வருகிறோம். ஆனால் அணியில் மரபியலை எதிர்த்து போராட முடியாது. ஒரு வீரர் 95 முதல் 100 கிலோ எடையும் மற்றொரு வீரர் 65 கிலோ எடை கொண்டும் இருந்தால் இயற்கையாகவே அதிக எடை கொண்ட வீரர் பந்தை வலிமையாக அடிப்பார். மேலும் இதில் நேரம் மற்றும் நுட்பம் என்பது மிகவும் அவசியம். எனவே அதில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

இதையும் படிங்க:உலகமே எங்க டீம பாத்து சிரிக்குது.. அவர்கிட்ட விசாரிச்சு அதுக்கு காரணம் யாருன்னு தூக்குங்க – பாக் கம்ரான் அக்மல் ஆதங்கம்

இதில் ஐபிஎல் தொடரை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். ஐபிஎல் தொடர் என்பது உலகத்தரம் வாய்ந்த வீரர்களை கொண்ட உலகின் சிறந்த போட்டி தொடராகும். ஐபிஎல் சர்வதேச அரங்கிற்கு வீரர்களை தயார் படுத்துகிறது. இந்திய அணி சிக்ஸர் அடித்ததை எங்களுடன் ஒப்பிடுவது என்பது வெஸ்ட் இண்டீஸ் எங்களோடு எத்தனை சிக்ஸர்களை அடித்துள்ளது என்பதை ஒப்பிடுவது போன்றதாகும்” என்று மூன்றாவது டி20 போட்டிக்கு முன்னதாக கூறியிருக்கிறார்.

- Advertisement -