இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி சிறப்பான முறையில் விளையாடி தனது முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் மோசமான செயல்பாடு குறித்து முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
பாகிஸ்தானின் மோசமான செயல்பாடு
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் செயல்பாடு சமீப காலமாக மிக மோசமான முறையில் இருந்து வருகிறது. டி20 உலக கோப்பையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியதை தொடர்ந்து சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவி கடுமையான விமர்சனத்தை சந்தித்தது.
அதற்குப் பிறகு தற்போதும் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடியிருந்தாலும் இரண்டாவது இன்னிங்ஸில் மோசமான செயல்பாட்டை தொடர்ந்து இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இது குறித்து தற்போது முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கம்ரான் அக்மல் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
உலகமே பாகிஸ்தான் அணியை கண்டு சிரிக்கிறது
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்த விதம் கண்டு உலகமே வியப்படைய வேண்டும் இதை யாருமே அவ்வளவு எளிதாக நம்ப மாட்டார்கள். பாகிஸ்தான் அணி வர வர உள்ளூர் அணியாக மாறி உள்ளது. ஒரு கிளப் டீம் கூட இந்த முறையில் விளையாடாது. இதுதான் எங்கள் பாகிஸ்தான் அணியின் தற்போதைய நிலைமை. சிறிய அணிகளுக்கு எதிராக தற்போது நாங்கள் வெற்றி பெற்றாலும் பெரிய அணிகளை நெருங்க முடியாது.
இதையும் படிங்க:ஹாங்காங் சிக்ஸ் கிரிக்கெட்.. மாஸான இந்திய அணி அறிவிப்பு.. உத்தப்பா தலைமையில் எகிறும் எதிர்பார்ப்பு
உலகமே தற்போது பாகிஸ்தான் அணியை பார்த்து சிரிக்கிறது. பாகிஸ்தான் அணி தற்போது சுயநல அணுகு முறையைக் கொண்டு இருக்கிறது. நம் நாட்டில் வீரர்கள் தற்போது தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடி அதற்குப் பிறகு அணியை பற்றி சிந்திக்கிறார்கள். அணி மற்றும் நிர்வாகத்திற்கு இடையே ஒற்றுமை இல்லை என்ற கருத்து நிலவுகிறது. எனவே இதில் சம்பந்தப்பட்ட வீரர் யார் என்பது குறித்து கேப்டனிடம்தான் விசாரிக்க வேண்டும். இது பற்றி விசாரித்து அதற்கு பொறுப்பான நபரை நீக்க வேண்டும். உலகமே தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக சாதனை படைக்க காத்திருக்கிறது. இது ஒரு வெட்கக்கேடான செயல்” என்று கூறுகிறார்.






