ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் ராஜத் பட்டிதர் வின்னிங் ரன்னை அடித்த்தும் ஆர்சிபி ஆர்சிபி என முழக்கமிட்ட பெங்களூரு ரசிகர்கள் – வீடியோ இணைப்பு

0
97

இந்த ஆண்டு ரஞ்சி ட்ராபி தொடரின் இறுதி போட்டி இன்று நடந்து முடிந்தது போட்டியின் முடிவில் மத்திய பிரதேசம் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி முதல் ரஞ்சி டிராபி தொடரை கைப்பற்றியது.

போட்டியில் முதலில் விளையாடிய மும்பை அணி முதல் இன்னிங்சில் 374 ரன்கள் குவித்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக சர்பராஸ் கான் 134 ரன்கள் குவித்தார்.பின்னர் விளையாடிய மத்தியபிரதேச அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவில் 536 ரன்கள் குவித்துள்ளது. மத்தியபிரதேச அணியில் அதிகபட்சமாக யாஷ் துபே 133 ரன்கள் குவித்துள்ளார்.

- Advertisement -

மும்பை அணியை விட 162 ரன்கள் முன்னிலையில் முதல் இன்னிங்சை மத்தியபிரதேச அணி முடித்துக் கொண்டது. பின்னர் விளையாடிய மும்பை அணி 269 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்சில் ஆட்டமிழந்தது. 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் விளையாடிய மத்தியபிரதேச அணி இன்று இறுதி நாள் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி கண்டது.

முதல் ரஞ்சி டிராபி தொடரை கைப்பற்றிய மத்திய பிரதேச அணி

- Advertisement -

1999 ஆம் ஆண்டு இதே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மத்தியபிரதேச அணி கர்நாடக அணிக்கு எதிராக இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தது. இன்று இருபத்தி மூன்று வருடங்கள் கழித்து பலம் வாய்ந்த மும்பை அணியை வீழ்த்தி வெற்றி கண்டுள்ளது. இரஞ்சி டிராபி தொடர் வரலாற்றில் 41 முறை பட்டம் வென்ற மும்பை அணியை வீழ்த்திய மத்தியபிரதேச அணிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து குவிந்த வண்ணம் இருக்கின்றன.

வின்னிங் ரன் அடித்த ராஜத் பட்டிதர்

மத்திய பிரதேச அணி வெற்றி பெற கடைசி ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் ராஜத் பட்டிதர் அந்த ஒரு ரன்னை அடித்து வெற்றி பெற வைத்தார் அவர் வின்னிங் ரன்னை அடித்ததும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் ஆர்சிபி ஆர்சிபி என்று முழக்கமிட்டனர். இவர் பெங்களூரு அணியில் ஐபிஎல் தொடரில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. எனவே அவர்கள் அவ்வாறு ஆரவாரம் செய்தனர். அவர்கள் அவ்வாறு முழக்கமிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -