ரஞ்சி டிராபி அரையிறுதி போட்டியில் கலக்கி கொண்டிருக்கும் பெங்களூரு வீரரான சபாஷ் அஹமத் – ரசிகர்கள் உற்சாகம்

0
103

இந்த ஆண்டுக்கான ரஞ்சி டிராபி தொடர் இறுதி கட்டத்தை தற்பொழுது எட்டியுள்ளது. ரஞ்சி டிராபி தொடரின் அரையிறுதி போட்டிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முதல் அரையிறுதிப் போட்டியில் மத்திய பிரதேசம் மற்றும் பெங்கால் அணிகள் எதிர் கொண்டு விளையாடி வருகின்றன. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் உத்தப்ப தேசம் மற்றும் மும்பை அணிகள் எதிர் கொண்டு விளையாடி வருகின்றனர்.

பெங்கால் மற்றும் மத்தியபிரதேசம் அணிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் அரையிறுதிப் போட்டி

போட்டியில் டாஸ் வென்ற மத்தியபிரதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸ் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 341 ரன்கள் அந்த அணி குவித்தது. பின்னர் விளையாடிய பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 273 ரன்கள் குவித்தது.

முதல் இன்னிங்ஸில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டிலும் பெங்கால் அணியைச் சேர்ந்த சபாஷ் அஹமத் கலக்கியுள்ளார். பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அவர் பேட்டிங்கில் ஏழாவது இடத்தில் களம் இறங்கி 116 ரன்கள் குவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி இரண்டாவது இன்னிங்சில் மத்தியப்பிரதேச அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

இந்த ஆண்டு நடந்த முடிந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் மிகச்சிறப்பாக சபாஷ் அஹமத் விளையாடினார். அது அதிரடியான பார்மை அவர் தற்போது இரஞ்சி டிராபி தொடரிலும் தொடர்கிறார். அவரது ஆட்டம் குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

350 ரன்கள் இலக்காக கொண்டு பெங்கால் அணி தற்போது இரண்டாவது இன்னிங்சில் விளையாடிக் கொண்டிருக்கிறது.63 ரன்கள் எடுத்த நிலையில் அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.