டி20 உலக கோப்பை வென்ற வீரருக்கு தடை.. எல்பிஎல் சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய முன்னாள் கேகேஆர் வீரர்.!

0
637

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி தொடரானது வருகின்ற ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி முடிவடைய இருக்கிறது. ஐந்து அணிகள் பங்கு பெறும் இந்தப் போட்டி தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது .

தம்புல்லா அவுரா அணி மட்டும் குவாலிபயர் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் மீதி இருக்கும் மூன்று இடங்களுக்காக நான்கு அணிகள் போராடி வருகிறது. இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் வீரரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் வீரருமான ஷசித்ரா சேனநாயகே மேட்ச் பிக்சிங்கில் சிக்கி இருக்கும் விவகாரம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

இலங்கை அணியின் சுழற் பந்து வீச்சு ஆல் ரவுண்டராக விளங்கியவர் ஷசித்ரா சேனநாயகே. இவர் இலங்கை அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டி 49 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 24 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 2012 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார் ஷசித்ரா சேனநாயகே .

ஒரு நாள் போட்டிகளில் 53 விக்கெட்டுகளையும் டி20 போட்டிகளில் 25 விக்கெட் களையும் வீழ்த்தியிருக்கும் இவரது சிறப்பான பந்துவீச்சு இங்கிலாந்து அணிக்கு எதிராக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 2014 ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வெல்ல இவரது பங்களிப்பும் முக்கியமானது .

மிடில் ஓவர்களில் பந்துவீசி ரன் குவிப்பை கட்டுப்படுத்தி எதிரணி அதிக ரன்களை குவிக்காமல் தடுப்பதில் வல்லவராக இருந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய இவர் ஒன்பது போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு ஓவருக்கு சராசரியாக 6.53 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

- Advertisement -

அவுட் ஆப் ஃபார்ம் காரணமாக இலங்கை தேசிய அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட இவர் முதல் தரப்போட்டி மற்றும் லங்கா பிரீமியர் லீக்கில் விளையாடி வந்தார். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற மேட்ச் பிக்சிங் தொடர்பான சூதாட்டப் புகாரில் இரண்டு வீரர்களை சூதாட்டத்தில் ஈடுபட வற்புறுத்தியதாக ஷசித்ரா சேனநாயகே மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இது தொடர்பாக அவர் மூன்று மாதங்களுக்கு நாட்டை விட்டு வெளியேற அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஷசித்ரா சேனநாயகே இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு அந்த நாட்டின் இமிகிரேஷன் டிபார்ட்மெண்ட் தடை விதித்துள்ளது.