சவுத் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக 20 வருடத்தில் முதல் முறை வரலாற்றுச் சிறப்பு மிக்க தொடர் வெற்றியை பதிவு செய்துள்ள வங்கதேச அணி

0
349
Ban ODI Series Victory vs Sa

1986 ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி, ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டி மூலம், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான பங்களாதேஷ், நேற்று தன் வரலாற்றில் சிறப்புமிக்க ஒருநாள் போட்டி தொடர் வெற்றியைப் பதிவுசெய்திருக்கிறது!

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாட தென்ஆப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் செய்த பங்களாதேஷ் அணி, முதல் ஆட்டத்தில் சகல துறைகளிலும் சிறப்பாகச் செயல்பட்டு வென்றாலும், இரண்டாவது போட்டியில் தென்ஆப்பிரிக்காவிடம் எளிதாகச் சரணடைந்திருந்து.

- Advertisement -

இந்த நிலையில் போட்டி 1-1 என்ற சமநிலையில் இருக்க, கோப்பையை நிர்ணயிக்கும் மூன்றாவது போட்டி நேற்று செஞ்சுரியன் சூப்பர் ஸ்போர்ட் பார்க்கில், இந்திய நேரப்படி மாலை 4.30க்கு தொடங்கியது. டாஸில் வென்ற பவுமா பேட்டிங்கை தேர்வு செய்ய, மலான்-டிகாக் களமிறங்கிறங்கினார்கள்.

ஆரம்பத்தில் ஆடுகளத்திலிருந்த பவுன்சை பயன்படுத்திக்கொள்ளாமல் பங்களாதேஷின் சோரப்-முஸ்தாபிசுர் ஜோடி பந்துவீச, மலான்-டிகாக் ஜோடி அதிரடியாய் ஆட ஆரம்பித்தது. அடுத்து ஆப்-ஸ்பின் ஆல்ரவுண்டர் மெஹதி ஹசன் வந்து டிகாக்கை பெவிலியன் அனுப்ப, பங்களாதேஷ் கிரிக்கெட்டின் சிறப்பு மிக்க வெற்றிக்கான முதல் வரி வரலாற்றுப் பக்கங்களில் எழுதப்படுகிறது!

அடுத்து பந்து வீச வந்த வேகப்பந்து வீச்சாளர் டஸ்கின் அகமத் ஸீமில் மணிக்கு 140 கி.மீ வேகத்தில், ஆடுகளத்தின் பவுன்சை பயன்படுத்தி வீச, தென்-ஆப்பிரிக்க பேட்டிங் வரிசையின் வீழ்ச்சி ஆரம்பிக்கிறது. இதில் இடையில் ஷகிப்-சோரப் உதவி செய்ய, டஸ்கின் அகமத் 5 விக்கெட்டுகளை அள்ளி, தென்-ஆப்பிரிக்காவை 154 ரன்களுக்கு 36 ஓவரில் சுருட்டிவிட்டார்.

- Advertisement -

அடுத்து எளிதான இலக்கோடு களமிறங்கிய பங்களாதேஷின் துவக்க ஜோடி தமிம்-லிட்டன்தாஸ் செஞ்சுரி பார்ட்னர்ஷிப் போட, 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாய் தென்-ஆப்பிரிக்காவை, அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி, SENA நாடுகளில் முதல் தொடர் வெற்றியைப் பதிவு செய்தது பங்களாதேஷ்!

பங்களாதேஷ் வெற்றி பெற்ற இரு ஆட்டங்களிலும் 10. 1. 36. 3 — 9. 0. 35. 5 என பவுலிங்கில் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு, 8 விக்கெட்டுகளை கைப்பற்றி, தொடர் வெற்றிக்கும் காரணமான டஸ்கின் அகமத், தொடர் நாயகன் விருதை பெற்றார்.

வெற்றிக்கான மேலும் சில காரணங்கள்.

தமிம்-லிட்டன் தாஸ் துவக்க ஜோடியின் சிறப்பான ஆட்டம்.

அபிப் ஹூசைன்- யாசிர் அலி ஆகிய புதுமுகங்களின் சிறப்பான பேட்டிங் பங்களிப்பு.

ஸ்பின் ஆல்ரவுண்டர்கள் ஷகிப்-மெஹதி ஹசனின் பேட்டிங்-பவுலிங் பங்களிப்பு!