வீடியோ: பேர்ஸ்டோ ரன் அவுட் சர்ச்சை.. வைரலாகும் தோனியின் பழைய வீடியோ.. தோனிக்கு நிகர் தோனி தான்

0
16303

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அஷஸ் டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது . இதன் இரண்டாவது டெஸ்ட் போட்டியை நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் முடிவடைந்தது.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா 43 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்று இருக்கிறது. நேற்றைய போட்டியின் போது இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சதம் எடுத்தும் இங்கிலாந்து அணியால் வெற்றி பெற முடியவில்லை .

- Advertisement -

நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ ரன் அவுட் செய்யப்பட்ட விதம் கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கேமரூன் கிளீன் பந்துவீச்சை எதிர்கொண்ட அவர் வந்து விக்கெட் கீப்பரின் கைகளில் தஞ்சம் புகுந்த பிறகு தனது கிரீசை விட்டு வெளியேறினார். அப்போது விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி பந்தை ஸ்டம்பில் அடித்து ரன் அவுட் அப்பீல் செய்தார்.

இந்த முடிவு மூன்றாவது நடுவருக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அவர் அவுட் கொடுத்தார். இந்த ரன் நோட் தொடர்பான சர்ச்சை இணையத்தில் இருந்தே நீடித்து வருகிறது இது ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் கொள்கைக்கு எதிரானது என பல்வேறு முன்னாள் வீரர்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் தங்களது வாதங்களை முன்வைத்து வருகின்றனர் .

இந்த சர்ச்சைகள் நீடித்து வரும் நிலையில் 12 வருடங்களுக்கு முன்பு எம் எஸ் தோனி செய்த ஒரு செயல் தற்போது வைரல் ஆகி வருகிறது . அது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது . இந்திய அணி 2011 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . 2011 ஆம் ஆண்டு லீட்ஸ் நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது இயான் மோர்கன் அடித்த பந்து எல்லை கோட்டிற்கு அருகே சென்றது. வந்து எல்லைக்கோட்டை கடந்து விட்டதாக நினைத்த இரண்டு இங்கிலாந்து பேட்ஸ்மன்களும் கிரீஸ் இருக்கு வெளியே நின்றனர். அப்போது பந்தை எடுத்த பிரவீன் குமார் விக்கெட் கீப்பர் இடம் கொடுத்து கிரீஸ்க்கு வெளியே இருந்த இயான் பெல் ரன் அவுட் செய்யப்பட்டார்.

- Advertisement -

மூன்றாவது நடுவரின் முடிவு இருக்கு சென்ற இந்த தீர்ப்பு ரன் அவுட் என்று உறுதியானது. ஆனாலும் தேநீர் இடைவேளைக்குப் பிறகு வீரர்கள் ஆட வந்த போதே ஏந்தல் மீண்டும் பேட்டிங் செய்ய களம் திரும்பினார். இந்திய அணி மற்றும் கேப்டன் டோனி ஆகியோர் இயான் பெல்ல்லிற்கு எதிராக செய்த அப்பீலை திரும்ப பெற்றுக் கொண்டதை தொடர்ந்து அவர் மீண்டும் ஆட வந்தார். தோனி மற்றும் இந்திய அணியின் ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட்டை உன்னால் வீரர்களும் கிரிக்கெட் ரசிகர்களும் வெகுவாக பாராட்டினர் .