இந்திய கிரிக்கெட்

தோனியால சாம்சனுக்கு பெரிய பிரச்சனை இப்ப உண்டாயிடுச்சு.. அவர் இப்ப வரணுமா?.. தலையால குழப்பம் ஆயிட்டாங்க – பத்ரிநாத் பேச்சு

நாளை மும்பை வான்கடே மைதானத்தில் சிஎஸ்கே மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக் கொள்ளும் மிக முக்கிய போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் தோனி விளையாடலாம் என்ற நிலையில் சுப்ரமணியம் பத்ரிநாத் சில முக்கிய விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

கடந்த போட்டிக்கு ஹைதராபாத்துக்கு தோனி சிஎஸ்கே அணி உடன் வந்து இருந்தார். எனவே அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் விளையாடவில்லை. இந்த நிலையில் ஆயுஸ் மத்ரே விலகி இருக்கும் சூழலில் தோனி விளையாட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

என்ன நடக்கப் போகிறது?

தற்போது ஆயுஸ் மத்ரே இடத்திற்கு தோனி வந்தால், சிஎஸ்கே அணியில் இம்பேக்ட் பிளேயர் இடத்தில் யார் இருப்பார்கள்? என்பது பெரிய கேள்வியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பத்ரிநாத் பேசும்பொழுது “முதலில் ஆயுஸ் மத்ரே இம்பேக்ட் பிளேயராக இருந்தார். இப்போது அவருடைய இடத்திற்கு தோனி வந்தால் விக்கெட் கீப்பராக இருப்பார். அப்பொழுது யார் இம்பேக்ட் பிளேயராக இருப்பார்கள்? தற்போது விக்கெட் கீப்பராக இருக்கும் சாம்சன் இம்பேக்ட் பிளேயராக இருப்பாரா? எனவே இப்போது தோனியை கொண்டு வரும் முடிவு சரியானதா? என்ற எண்ணம் எனக்கு வருகிறது”

- Advertisement -

முன்பும் இதே நடந்தது

“தோனி திரும்ப வருவது குறித்து தொடர்ந்து பேசப்பட்டே வருகிறது. ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போதும் அவர் ஹைதராபாத் வரையில் வந்து விட்டு விளையாடவில்லை. எனவே இந்த விஷயத்தில் தெளிவின்மை நிலவுவதால் அது சிஎஸ்கே அணியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது”

இதையும் படிங்க : ரோஹித் சர்மா என்னை மன்னிச்சிடு.. அரை ஆல்ரவுண்டர்களுக்காக உனக்கு தப்பு பண்ணிட்டேன் – ஸ்ரீகாந்த் வெளிப்படை

“ஆயுஸ் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவு. பவர் பிளேவில் அவர் 250 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினார். சாம்சன் உடன் இரண்டு போட்டிகளில் இணைந்து அவர் விளையாடிய போது அவரே தாக்கி விளையாடினார். அவர் இல்லாததால் தற்போது அந்த தாக்கம் குறைந்து விடும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts