இந்திய தேர்வுக் குழுவின் முன்னாள் தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இந்திய முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
சமீபத்தில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஒரு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் ரோகித் சர்மா குடித்த ஒரு முக்கிய கேள்விக்கு அவர் மிகவும் வெளிப்படையான ஒரு பதிலை அளித்தார்.
15 வருடங்களுக்கு முன்பு நடந்தது
கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் 2011 ஆம் ஆண்டு ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. அந்த அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி இருந்தார். மேலும் அந்த உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த உலகக் கோப்பை இந்திய அணியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டார்.
இன்று வரையில் ரோஹித் சர்மா இந்த சம்பவம் தன்னை மிகப்பெரிய அளவில் மனம் வருத்தம் அடைய வைத்தது என்று சொல்லி வருகிறார். இந்த நிலையில் தான் ஸ்ரீகாந்த் அவரிடம் இதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அப்போதைய சூழ்நிலை அது…
இதுகுறித்து ஸ்ரீகாந்த் பேசும்போது “அவர் குறித்து இப்போது நினைத்தாலும் எனக்கு வருத்தமாக இருக்கிறது. கடந்த ஆண்டு ரோஹித் சர்மாவிடம் என்னை மன்னித்து விடுங்கள் என்று கேட்டிருந்தேன். நான் வேண்டுமென்றே அவரை நீக்கவில்லை. நாங்கள் அரை ஆல்ரவுண்டர்களை தேர்ந்தெடுக்க விரும்பினோம். எங்களுடைய சிந்தனைப் போக்கு 1983 உலகக் கோப்பை போலவே இருந்தது”
இதையும் படிங்க: வெறும் 227 பந்து.. மேக்ஸ்வெல்லின் வேற லெவல் ரெக்கார்டை உடைத்த.. 15 வயது சூரியவன்சி.. தொடங்கும் சாதனை
“இறுதியில் அந்த உலகக் கோப்பையில் யார் தொடர் நாயகன் தெரியுமா? நாங்கள் முன்னுரிமை கொடுத்த அரை ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்தான். அந்தத் தொடரில் சச்சின், சேவாக், ரெய்னா, யூசுப் அதான் என பலர் பந்துவீசி இருந்தார்கள். இந்த அரை ஆல்ரவுண்டர்கள் காரணமாக ரோஹித் சர்மாவுக்கு ஒரு இடத்தை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை” என்று கூறியிருக்கிறார்.






