மோசமான பிட்ச்.. நிறுத்தப்பட்ட ஆட்டம்.. ஆஸி பிக் பாஸில் நடந்த சோகமான நிகழ்வு .. என்ன இருந்தாலும் ஐபிஎல் மாறி வருமா.?

0
280

இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போல ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஸ் கிரிக்கெட் லீக் போட்டி தொடர் உலகம் முழுவதிலும் பிரபலமானது. இது பிபிஎல் தொடர் என அழைக்கப்படுகிறது. தற்போது 13 வது சீசன் நடைபெற்று வருகிறது.

உலகின் மற்ற சர்வதேச அணிகளை சார்ந்த முன்னணி வீரர்களும் இந்த தொடரில் பங்குபெற்று விளையாடி வருகின்றனர். எட்டு அணிகள் கலந்து கொள்ளும் இந்த போட்டி தொடரில் இதுவரை 7 போட்டிகள் நடைபெற்ற நிலையில் பிரிஸ்பேன் ஹீட் அணி இரண்டு வெற்றிகள் உடன் முதலிடம் பெற்று இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் எட்டாவது போட்டி இன்று ஆஸ்திரேலியாவின் ஜீலாங் தமிழில் வைத்து நடைபெற்றது. இந்தப் போட்டியில் பெர்த் ஸ்க்ரோச்சர்ஸ் அணியும் மெல்போன் ரெனகேட்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மெல்போன் அணியின் கேப்டன் பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த பெர்த் அணி 6.4 ஓவர்களில் 30 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகள் இழந்திருந்தது. இந்நிலையில் மெல்போன் பந்துவீச்சாளர் சதர்லாந்து வீசிய ஆறாவது ஓவரின் ஐந்தாவது பந்து அனைவரும் எதிர்பார்க்காத வகையில் மேல் எழும்பி வந்தது. இதனைத் தொடர்ந்து பெர்த் அணியின் கேப்டன் அலெக்ஸ் ஹார்டி நடுவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். நடுவர்கள் போட்டியை நிறுத்தி வீரர்களை ஃபெவிலியன் அழைத்துச் சென்றனர் .

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஆடுகளத்தின் ஒரு சில பகுதிகள் மிக மோசமாக இருப்பதால் பேட்ஸ்மேன் களுக்கு ஆபத்து விளைவிக்க கூடும். எனவே இந்தப் போட்டியை முடித்துக் கொள்ளலாம் என கள நடுவர்கள் போட்டி நடுவரிடம் முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து இரண்டு அணியின் கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையின் முடிவில் போட்டி கைவிடப்பட்டதாக போட்டி நடுவர் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இந்தப் போட்டி கைவிடப்பட்டதால் போட்டியை காண வந்த ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

- Advertisement -

போட்டியின் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் பேசிய நடுவர்” இது ஒரு துரதிஷ்டவசமான முடிவு. இந்தப் போட்டி கைவிடப்பட்டிருக்கிறது. ஆடுகளம் வீரர்களுக்கு அபாயகரமானதாக உள்ளது. இது விளையாட முடியாத ஆடுகளம் இல்லை. எனினும் வீரர்களின் நலன் கருதி கலந்தாலோசிக்கப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் போட்டி வெற்றி தோல்வி இன்றி கைவிடப்பட்டுள்ளதால் இரண்டு அணிகளும் தலா ஒரு புள்ளி பிரிகின்றன என அறிவித்திருக்கிறார்.

ஆடுகளத்தின் தன்மையால் போட்டி கைவிடப்படுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் இதுபோல கைவிடப்பட்டிருக்கிறது. 1997 ஆம் ஆண்டு கௌகாத்தியில் நடைபெற்ற இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டியிலும் ஆடுகளம் வீரர்களுக்கு ஆபத்தானது என கருதி நடுவர்கள் போட்டியை கைவிட்டனர். மேலும் 2009 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. 23 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் ஆடுகளத்தால் வீரர்களுக்கு காயம் ஏற்படும் எனக்கருதி போட்டி கைவிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.