“பேக் டு பேக் சதமடித்த கிங் கோலி”… ஆர்சிபி அணியை ஒற்றை ஆளாக தூக்கி நிறுத்திய விராட் கோலி! – 197 ரன்கள் குவிப்பு!

0
340

அடுத்தடுத்த இரண்டு சதங்களை அடித்து ஆர்சிபி அணியின் பிளே-ஆப் வாய்ப்பை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறார் விராத் கோலி. குஜராத் அணிக்கு எதிராக 197 ரன்களை ஆர்சிபி அணி குவிப்பதற்கு உதவினார்.

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதி வரும் லீக் போட்டியில் ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்கிறது. கட்டாயம் வெற்றிபெற்றாக வேண்டிய போட்டியில் ஆர்சிபி அணிக்கு விராட் கோலி மற்றும் டு ப்ளசிஸ் இருவரும் ஓபனிங் இறங்கினர்.

- Advertisement -

மிகச் சிறந்த பார்மில் இருந்த டு பிளசிஸ் இப்போட்டியில் 28 ரன்களுக்கு அவுட் ஆனார். முதல் விக்கெட்டிற்கு விராட் கோலி-டு பிளசிஸ் ஜோடி 67 ரன்கள் சேர்த்தது. அடுத்து உள்ளே வந்த மேக்ஸ்வெல் 11 ரன்கள், லோம்ரர் ஒரு ரன் அடித்து அவுட் ஆகினர்.

ஆர்சிபி அணிக்கு மிடில் ஆர்டர் மிகவும் மோசமாக இருந்து வந்திருக்கிறது. ஆனால் இம்முறை பிரேஸ்வெல் அதனை சரிசெய்து விராட் கோலியுடன் பாட்னர்ஷிப் அமைத்தார். இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 47 ரன்கள் சேர்த்தது. பிரேஸ்வெல் 26 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

அடுத்து உள்ளே வந்த தினேஷ் கார்த்திக் வந்த முதல் பந்திலையே டக் அவுட் ஆனார். இந்த வருட ஐபிஎல் சீசனில் நான்காவது முறையாக தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆகிறார்.

- Advertisement -

இருப்பினும் அணியை சரிவடைய விடாமல் கடைசிவரை ஒற்றை ஆளாக நின்று பெரிய ஸ்கொர் எட்ட உதவினார் விராட் கோலி. அத்துடன் 60 பந்துகளில் சதமும் அடித்தார். ஐபிஎல் வரலாற்றில் இவர் அடிக்கும் 7ஆவது சதம் இதுவாகும்.

கடைசியில் இவருக்கு பக்கபலமாக இருந்த அனுஜ் ராவத் 1 சிக்ஸ் மற்றும் 1 பவுண்டரி உட்பட 15 பந்துகளில் 26 ரன்கள் அடித்துக்கொடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்தது ஆர்சிபி.

கடைசிவரை அவுட்டாகாமல் விராட் கோலி மற்றும் டு பிளசிஸ் இருவரும் களத்தில் இருந்தனர். குஜராத் அணிக்கு நூர் அகமது 2 விக்கெட்டுகள், ஷமி, யாஷ் மற்றும் ரஷித் கான் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

198 ரன்கள் இலக்கை கட்டுப்படுத்தி, பலம்மிக்க குஜராத் அணியை வீழ்த்துமா ஆர்சிபி? பிளே-ஆப் செல்லுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.