பொறுப்பிலிருந்து நீக்கியது பிசிசிஐ!

0
897

சேத்தன் சர்மா தலைமையிலான தலைமை தேர்வுக் குழுவை மொத்தமாக கலைத்துள்ளது பிசிசிஐ. புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்றும் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

கடந்த அக்டோபர் மாதம் பிசிசியின் வருடாந்திர பொது குழு மும்பையில் நடத்தப்பட்டது. அப்போது “சேத்தன் சேர்மா தலைமையிலான தேர்வு குழு நீக்கப்பட்டு புதிய தேர்வு குழு நியமிக்கப்படும். அத்துடன் ஆலோசனை குழுவும் நியமிக்கப்படும்.” என்று செயலாளர் ஜே ஷா தெரிவித்தார்.

- Advertisement -

“நியமிக்கப்படவிருக்கும் புதிய ஆலோசனை குழு, ஒவ்வொரு வருடமும் தேர்வு குழுவின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை கவனித்து அதைப்பற்றி பிசிசிஐக்கு தெரியப்படுத்த வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.

தற்போது இருக்கும் தேர்வு குழு வங்கதேசம் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான வீரர்களை தேர்வு செய்த பிறகு தங்களது பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ளும் என்றும் அந்த ஆண்டு பொதுக்குழு வில் ஜே ஷா குறிப்பிட்டார்.

இந்நிலையில் உலகக் கோப்பை டி20 தொடரின் அரையிறுதியோடு இந்தியா வெளியேறியதால் தற்போது பிசிசிஐ அதிருப்தியாக இருக்கிறது. இதன் காரணமாக சேத்தன் சர்மாவை மட்டும் நீக்காமல் மொத்த தேர்வு குழுவையும் நீக்கியது.

- Advertisement -

தலைமை தேர்வு குழு அதிகாரியின் பொறுப்பிற்கு வர விரும்புபவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.

தலைமை தேர்வு குழுவிற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்:

  1. குறைந்தபட்சம் ஏழு டெஸ்ட் போட்டிகள், 30 முதல்தர போட்டிகள் அல்லது 10 ஒருநாள் போட்டிகள் மற்றும் 20 முதல்தர போட்டிகள் விளையாடி இருக்க வேண்டும்.

2. குறைந்தபட்சம் 5 வருடங்களுக்கு முன்பு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.

இந்த தகுதிகள் இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.