பாகிஸ்தான் சாதனையை உடைத்து பாபர் ஆசம் விராட் கோலி வரிசையில் சேர்ந்தார்!

0
4112
virat kholi Babar Azam

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கராச்சி நகரில் நடைபெற்று வருகிறது இதில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி ரன்களை 304 எடுத்தது இதனை அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி ஹாரி ப்ரூக்சின் அபார ஆட்டத்தினால் 354 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இரண்டாவது இன்னிங்க்ஸை தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 216 ரங்களுக்கு ஆட்டம் இழந்து இங்கிலாந்து அணிக்கு 167 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்து உள்ளது .இங்கிலாந்து அணியின் அறிமுக வீரர் ரெஹான் அஹமது சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் 54 ரன்களையும் சவுத் ஷகீல் 53 ரன்களையும் எடுத்தனர்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி ஆட்டு நேர முடிவில் 112 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட் களை இழந்திருக்கிறது .இந்த போட்டியில் அரைசகத்தை அடித்ததன் மூலம் பாபர் அசாம் 2022 ஆம் ஆண்டில் ஆயிரம் ரன்களை கடந்தார் . இதன் மூலம் 17 வருட சாதனையை முறியடித்தார் பாபர் அசாம் .

இதற்கு முன்பாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஒரே வருடத்தில் 999 ரண்களை எடுத்திருந்தார். அதிக ரன்கள் எடுத்து கேப்டன் என்ற சாதனையை வைத்திருந்தார் . தற்போதைய பாபரசம் ஆயிரம் ரண்களை கடந்ததன் மூலம் இந்த அரை சதத்தின் மூலம் 17 வருட சாதனையை முறியடித்தார் .

ஒரே வருடத்தில் டெஸ்ட் போட்டிகளில் ஆயிரம் ரண்களை கடந்ததன் மூலம் சச்சின் டெண்டுல்கர்,லாரா.ரிக்கி பாண்டிங் மற்றும் விராட் கோலி ஆகியோருடன் சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். பெஸ்ட் ஜாம்பவான்கள் ஆன பேட்ஸ்மேன்கள் கேப்டனாக இருக்கும் பொழுது ஒரு வருடத்தில் ஆயிரம் கண்களுக்கு மேல் எடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது ஒரே வருடத்தில் கேப்டன் பாபர் அசாம் ஆயிரம் ரன்களை குவித்தன் மூலம் இந்த சாதனை பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார் .

- Advertisement -

டெஸ்ட் போட்டிகளில் ஒரு வருடத்தில் ஆயிரம் ரன்கள் அடிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல அதுவும் கேப்டனாக இருந்த அடிப்பது தனி சிறப்பு ஆகும் . இந்த வருடம் 14 டெஸ்ட் போட்டிகளில் ஆடி உள்ள பாபர் 1009 ரன்கள் சேர்த்துள்ளார், இதில் மூன்று சதங்களும் சதங்களும் 8 அரை சதங்களும் அடங்கும்.