“பாபர் உன் சுமாரான கேப்டன்சிக்கு இந்தியா நன்றி கடன் பட்டிருக்குபா!” – கவாஸ்கர் பாபர் கேப்டன்சி பற்றி அதிரடி விமர்சனம்!

0
3213
Gavskar

நேற்று ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், இந்திய அணியை 200 ரன்னுக்கு உள்ளாக சுருட்டுவதற்கு ஒரு வாய்ப்பு இருந்தது, அந்த வாய்ப்பை கேப்டன் பாபர் அசாம் தவறவிட்டார் என்று சமூக வலைதளத்தில் பரவலான கருத்துக்கள் போய்க் கொண்டிருக்கிறது!

இந்திய அணி ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் என முக்கிய நான்கு விக்கெட்டுகளை வெகு வேகமாக இழந்துவிட்டது. இந்த நிலையில் இளம் வீரர் இசான் கிஷான் மற்றும் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா இருவர் ஜோடி சேர்ந்து 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை மீட்டு 266 ரன்கள் சேர்க்க வைத்தனர்.

- Advertisement -

இந்தப் போட்டியில் இந்திய அணி தனது பத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி இழந்த 10 விக்கெட்டுகளையும் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே கைப்பற்றினார்கள். அந்த அணியின் சுழற் பந்துவீச்சாளர்களால் எந்த தாக்கத்தையும் ஆட்டத்திற்குள் கொண்டுவர முடியவில்லை. மேலும் ரன்களையும் வாரி வழங்கினார்கள்.

இந்த போட்டியில் நான்கு விக்கெட்டுகள் வீழ்ந்திருந்த பொழுது, மேற்கொண்டு பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களை கேப்டன் பாபர் அசாம் பயன்படுத்தாமல், சுழற் பந்துவீச்சாளர்களை கொண்டு வந்து அவர்கள் ஓவரை முடிப்பதிலேயே கவனமாக இருந்தார். இது இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களை நிலை நிறுத்திக் கொண்டு பாட்னர்ஷிப் அமைக்க, வெகு உதவியாக இருந்தது. இதன் காரணமாகவே அவர்கள் நெருக்கடி இன்று விளையாடினார்கள். இந்தியாவிற்கு கௌரவமான ஸ்கோர் வந்தது.

இதுகுறித்து இந்திய லெஜெண்ட் சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “கேப்டன் பாபரின் பந்துவீச்சு மாற்றங்கள் எந்த அர்த்தமும் இல்லாதது என்று நான் நினைக்கிறேன். உங்கள் வேகப்பந்துவீச்சாளர்கள் ஆரம்ப விக்கெட் எல்லாவற்றையும் கைப்பற்றி இருந்தால், நீங்கள் ஒரு முனையிலாவது அவர்களைத் தொடர்ந்து பயன்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அப்படி பாபர் செய்யவில்லை. சதாப் மற்றும் நவாஸ் உடன் தொடர்ந்து ஒரு வேகப்பந்துவீச்சாளர் பந்துவீசி இருக்க வேண்டும்.

- Advertisement -

இந்த இடத்தில்தான் பாகிஸ்தான் ஒரு தந்திரத்தை தவறவிட்டது. மேற்கொண்டு வேகபந்துவீச்சாளர்களை பயன்படுத்தாமல் பாட்னர்ஷிப்பை வளர விட்டதற்கு இந்தியா நன்றி கடன் பட்டு இருக்கிறது. இஷான் கிஷான் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரில் ஒருவரது விக்கெட்டை வேகப்பந்துவீச்சாளர்கள் கைப்பற்றி இருந்தால், இந்தியா 175 இல்லை 200 ரன்களுக்குள் அடங்கி இருக்கும்.

நிச்சயமாக மிக அருமையாக ஒரு முனையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா நின்றார். அவருக்கு ஆட்டம் எப்படி இருக்கிறது சூழ்நிலை என்ன என்பது குறித்து மிக தெளிவாக தெரியும். எனவே அவர் இஷான் கிஷானையும் சிறப்பாக வழி நடத்தினார். எனவே அங்கு மிகச்சிறந்த பார்ட்னர்ஷிப் வந்தது. இல்லையென்றால் அப்படிப்பட்ட பார்ட்னர்ஷிப்புக்கு வழியே இல்லாமல் இந்தியா குறைந்த ஸ்கோரில் ஆல் அவுட் ஆகி இருக்கும்!” என்று கூறியிருக்கிறார்!